68
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
பின்னர், தலையை அச்சுபோல (Pivot) வைத்தவாறு அப்படியே தலையையும் உடலையும் சுற்றியவாறு வர வேண்டும். உடலைச் சுற்றிவரும்பொழுது, தலையையும் சுவற்றிலிருந்து தொடர்பு அகன்றுவிடாமல் பார்த்துக் கொள்வதுடன், 2 அடிக்கு அப்பால் கிழிக்கப்பட்டிருக்கும் கோட்டையும் கடந்து உள்ளே போய்விடாமலும் இருக்க வேண்டும்.
4.முன்பொருள் எடுத்தல் (Aero Dive)
இதில் பங்கு பெறுபவர் முதலில் இருகால்களையும் சேர்த்து நிமிர்ந்த நிலையில் நிற்கவேண்டும்.
அவர் நிற்கும் இடத்திலிருந்து ஏறக்குறைய 6 அங்குல தூரத்தில் ஒரு கைக்குட்டையையோ அல்லது வேறு ஒரு பொருளையோ வைக்கவேண்டும்.
இப்பொழுது நிமிர்ந்து நின்று கொண்டிருப்பவர், வலது கையை முன்புறமாக (நெஞ்சுக்கு நேராக) நீட்டிக் கொண்டிருக்க வேண்டும். பிறகு இடதுகையை பின் புறமாக நீட்டவேண்டும். அதாவது வலதுகையும் இடதுகையும் ஒரு நேர்க்கோட்டில் இருப்பதுபோல நீட்டியிருக்க வேண்டும்.
அதன்பின், இடதுகாலை எடுத்து பின்புறமாக வைத்துக் கொண்டு, இப்பொழுது முன்புறமாகக் குனிந்து வலது காலின் முழங்காலை வளைக்காமல், கீழே கிடக்கும் கைக்குட்டையை எடுக்கவேண்டும்.
குறிப்பு: கைக்குட்டையை எடுக்கும்பொழுது சம நிலையை இழந்துவிடக் கூடாது. முழங்கால்களை எக்காரணம் கொண்டு வளைக்கவே கூடாது.