இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்
69
5. ஒரு காலில் உட்காருதல் (Knee Dip)
முதலில் விறைப்பாக நிமிர்ந்து நிற்கவேண்டும்.
பிறகு, இடதுகாலைத் தூக்கிக்கொண்டு வலது காலில் மட்டும் நிற்கவேண்டும்.
அதன் பின்னர், தூக்கிய இடதுகாலைப் பின்புறமாகக் கொண்டுசென்று நிறுத்தி, வலது கையால் கணுக்காலைக் (பின்புறத்தில் தான்) கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது, வலதுகாலின் முழங்காலை மெதுவாக மடக்கியவாறு அப்படியே உட்கார வேண்டும். சமநிலை இழக்காமல் உட்கார வேண்டும்.
இதைப் போலவே, இடது காலாலும் உட்காரவேண்டும்.
6.கைநடை நடத்தல் (Walrus Walk)
வால்ரஸ் என்றால் கடல்வாழ் ஜந்து என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலத் தமிழ் அகராதி ஒன்று கடல் யானை என்றும், கடல் குதிரை என்றும், கடற்பசு என்றும், இதற்குப் பொருள் கூறுகிறது எனவே, வால்ரஸ் நடப்பதைப் போன்று நடை என்பதால், இதனை கைநடை என்று தமிழாக்கியிருக்கிறோம். அதாவது கையால் நடந்து செல்லும் தன்மையினால் இந்தப் பெயரைக் கொடுத்திருக்கிறோம்.
முதலில், கால்கள் இரண்டையும் பின்புறமாக நீட்டி, உள்ளங்கைகளை தரையில் ஊன்றி வைத்திருந்தபடி இருக்கவும்.