இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்
71
8. எளிதாகத் தூக்கு(Lead Feet) முதலில், நிமிர்ந்து விறைப்புடன் நிற்கவேண்டும்.
பிறகு, கட்டைவிரல்களாலும் ஆட்காட்டி விரல்களாலும் (அதாவது இரு கைகளையும் கொண்டு) நெற்றிப் பொட்டை (Temples) அழுத்திப் பிடித்துக்கொண்டு, முழங்கைகள் உடலை ஒட்டி இருப்பது போல இறுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பாங்கர் (Partner) ஒருவரைவிட்டு, முழங்கை யுடன் அப்படியே மேலே தூக்கிச் செய்ய வேண்டும்.
குறிப்பு: கைகளைக் கெட்டியாக ഞഖ്, உடலோடு ஒட்டிக் கொண்டவாறு பிடித்துக் கொண்டிருப்பதால், தூக்கும் பாங்கருக்கு எளிதாகத் தூக்கிட உதவும்.
நெற்றிப் பொட்டைப் பிடித்திருப்பவர் இறுக்கமான பிடியை அப்படியே தொடர்ந்து பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். பிடி இறுக்கம் இழந்து தளர்ந்து போனால், துக்குபவரால் தூக்க முடியாது.
9. கைகளில் தொங்கு(Strong Arm Hand)
முதலில் விறைப்பாக நிமிர்ந்து நின்று, இடது கையை பக்கவாட்டில் நீட்ட வேண்டும்.
அவனுடைய பாங்கர் (Companion) அவனது பின் புறமாகச் சென்று இடது கைப்புறமாக நின்று தனது வலது கையை நீட்டி, அவனது இடப்புறத் தோளில் வைத்து, இடது கையை நீட்டிய இடது கையின் முழங்கை அருகில் வைத்து, அப்படியே தொங்க வேண்டும்.