72
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
குறிப்பு: நீட்டப்பட்டிருக்கும் கையில் ஆள் தொங்குவது போலவேதான் அது தோற்றம் தரும். ஆனால், அது அப்படி அல்ல. நீட்டியுள்ள இடதுகை தோளின் வலது கையால் பற்றியிருப்பதாலும் இடதுகை முழங்கையினைப் பற்றி யிருப்பதாலும், உடலை கை சக்தியினால் தூக்கிக் கொள்வது கையில் தொங்குவது போலவே தெரியும்.
அவ்வாறு அடுத்தவர் தொங்கும் பொழுது, கையையும் உடலையும் விறைப்பாகவே நிற்பவர் வைத்திருக்க வேண்டும்.
10. நியே எழுந்திரு (Free Standing)
மல்லாந்து படுத்துக் கொண்டு, கைகளிரண்டையும் நெஞ்சின் மேல் முதலில் வைத்திருக்க வேண்டும்.
கைகளின் உதவி இல்லாமல், படுத்த நிலையிலிருந்து,
கால்களை நீட்டியவாறு எழுந்து உட்கார்ந்து, பின்னர் நிற்கும் நிலைக்கு வரவேண்டும்.
அதுபோலவே, மல்லாந்த படுத்த நிலையிலிருந்து, நெஞ்சின் மீது கைகளைக் கட்டியிருந்தவாறு, ஒரு காலை மடக்கியவாறு வைத்துக் கொண்டு, எழுந்து உட்கார வேண்டும்.
குறிப்பு: கைகளையும் ஊன்றக் கூடாது. யாருடைய உதவியையும் நாடக்கூடாது.
11. கோழிக்குஞ்சு நடை Bool (Chicken Walk)
குதிகாலைத் தூக்கிய நிலையில், முழங்கால்களை மடக்கிக் கொண்டு முதலில் குதிகால்கள் மேல் குந்தி இருக்க வேண்டும்.