உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



ஆனால், கைகளை நெஞ்சுக்கு முன்னால் கொண்டு வந்து சேர்த்துப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, பின்புறமாக அப்படியே வளைந்து, 25 அல்லது 30 அங்குலத்திற்கு அப்பால் பின்புறம் வைக்கப்பட்டுள்ள கைக்குட்டையை வாயால் கெளவி எடுக்க வேண்டும்.

குறிப்பு: கைகளை கட்டியிருப்பதிலிருந்து எடுத்திடக் கூடாது. வாயால் மட்டுமே கெளவி எடுக்க வேண்டும். 25 அல்லது 30 அங்குலம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும் அவரவருக்குரிய உயரத்திற்கு ஏற்ப, கைக்குட்டையை வைத்துக் கொள்ளலாம்.

14. கழுதை உதை (Donkey Drive)

முதலில் வலது காலில் நின்று, முன்பக்கமாகக் குனிந்து இடது காலைப் பின்புறமாக நீட்டியிருக்க வேண்டும்.

பிறகு இன்னும் முன்புறமாகக் குனிந்து, நீட்டியிருந்த இடது காலை வலது காலிருந்த இடத்திற்குக் கொண்டுவர வேண்டும். வலது காலைப் பின்புறமாக நீட்ட வேண்டும்.

குறிப்பு: வலது காலையும் இடது காலையும் மாறிமாறி பின்புறம் எவ்வளவு உயரமாக நீட்டிஉயர்த்த முடியுமோ, அந்த அளவுக்கு நீட்டி விடவேண்டும்.

நீட்டுவதை வேகமாக நீட்ட (உதைக்க) வேண்டும். அதாவது கழுதையானது பின்னங் காலால் உதைப்பதுபோல வேகமாகப் பின்புறம் நீட்டி உயர்த்தவேண்டும்.

15. குதிரைத் தாண்டல் (The Pony Stride)

நின்ற இடத்திலிருந்து முன்புறமாகத் தாண்டிக் குதித்து

முழங்கால்களை முழுதுமாக மடித்து குதிகால்களின்மேல் உட்காரவும். அப்பொழுது, இரண்டு முழங்கால்களுக்கும்