பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள் 75

இடையில் இடைவெளி அதிகமாக இருப்பதுபோல் வைக்கவும். கைகள் இரண்டையும் நெஞ்சுக்குமுன் வைத்துப் பிணைத்துக் கொள்ளவும்.

அடுத்து பின்புறமாகத் தாவிக் குதித்து கால்களிரண் டையும் அகலமாக விரித்து கைகளை பக்கவாட்டிற்குக் கொண்டுசென்று அங்கிருந்து தலைக்குமேலே உயர்த்தி நிற்கவும்.

இதுபோல் பலமுறை செய்யவும்.

குறிப்பு: தாவிக் குதிக்கும்பொழுதே, கைகளை கட்டிக்

கொள்வதையும், கைகளைப் பிரிப்பதையும், கால்களை சேர்ப்பதையும் அகலமாக வைப்பதையும் உடனடியாக செய்திடவேண்டும். எல்லாம் ஒரே சமயத்தில் செய்கின்ற சாகசச் செயல்களாக அமைந்திட வேண்டும்.

16. காலுக்கடியில் காசு (Cork Screw)

கால்களிரண்டையும் 6 அங்குல அகலத்திற்கு விரித்து நில் இடதுகாலின் குதிகால்களுக்குப் பக்கவாட்டில் ஒரு காசினை அல்லது கைக்குட்டையை வை.

முழங்கால்களை வளைத்து, வலதுகையை வலது காலுக்குப் பின்புறமாகக் கொண்டுவந்து, அப்படியே உடலைவளைத்து, இடது காலுக்குப் பின்புறம் உள்ள காசினை எடுக்க வேண்டும்.

இடது கையை சமநிலைக்காகப் பயன்படுத்தி கொள்ளலாம் கால்கள் இருந்த இடத்தைவிட்டு அசையவோ நகரவோ கூடாது.

அதேபோல் வலது கால்பக்கம் காசை வைத்தும் இடது. கையால் எடுக்கலாம்.