பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விட்டன. வேதயக்ஞச் சடங்குகளைப் பல கடவுளர்களுக்குச் செய்து செழிப்பும், செல்வமும் பெற விரும்பிய இனக்குழு மக்களுக்கு லோகாயதர்கள் வருணன், அக்கினி போன்ற தெய்வங்கள் இல்லை என்று சொல்ல இக்கருத்துக்கள் எழுந்தன. இவையே நாத்திகம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. இது சர்வ வல்லமையுள்ள கடவுளை மறுப்பதாக ஆகாது. நமது வரலாற்று முற்காலத்தைப் பற்றி நாம் அறிய அறிய, அக்காலத்தின் ஒரு கட்டத்தில் ‘கடவுள்’ என்ற கருத்தே இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுவோம்.
கார்பே, ரிக்வேதச் செய்யுள் ஒன்றைச் சான்றாகக் காட்டுகிறார். ‘இந்திரன் என்றோர் தெய்வமில்லை’ என்ற கருத்துடைய இச்செய்யுளின் பொருளைப் புரிந்து கொள்ளாமல் இதனை நாத்திக வாதம் ரிக் வேதகாலத்திலேயே தோன்றிவிட்டது என்ற தம் முடிவுக்குச் சான்றாக கார்பே காட்டுகிறார். உண்மையில் இது இந்திரனைப் புகழ்ந்து கூறுகிறது ஒரு செய்யுளாகும். இந்திரனைக் குறை கூறுவதென்பது இந்திரனது இருப்பில் நம்பிக்கையிருந்தால்தானே சாத்தியம்?

இந்திரன் இருப்பையே சந்தேகிக்கிற செய்யுள்கள் ரிக் வேதத்தில் உள்ளன. உதாரணமாக, “வீரர்களே இந்திரன் இருப்பது உண்மையானால் அவனது புகழைப் பாடுங்கள். நாமா என்னும் ரிஷி,

“இந்திரன் என்று எவரும் இல்லை. யார் அவனைக் கண்டார்கள். யார் புகழை நீங்கள் பாடப் போகிறீர்கள்?“ என்று சொல்லுகிறார் (ரிக்வேதம் VIII 100).

இந்தச் சந்தேகம் ‘ஒரு கடவுள்’ என்ற கொள்கைக்கு வழிவகுத்ததா, அல்லது ‘கடவுள் இல்லை’ என்ற கொள்கைக்கு வழிவகுத்ததா என்பதே கேள்வி. வரலாற்று முற்காலக் கடவுளர்களை’ப் பற்றிய நம்பிக்கை மறுக்கப்பட்டு, ‘ஒரே கடவுள்’ என்ற கொள்கை பிறந்தது. ஆகவே இந்த சந்தேகங்கள் முற்கால பல தெய்வ வணக்கத்தை மறுக்கவே

21