பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளர் என்று அழைப்பர். சாதாரண மனிதர்களாக வாழும் இவர்கள், ஊட்டு, கொடை, விழா நேரங்களில் சாமியேறப் பெற்றவர்களாக தங்கள் தன்மையை இழக்கிறார்கள். இவை யாவும் நம்பிக்கையே. சாமியாடிகள் தங்கள் உடலில் சிறிது நேரம் சாமி புகுந்து கொள்வதாக எண்ணுகிறார்கள். பக்திமான்கள் அதனை நம்புகிறார்கள்.

வைஷ்ணவ ஆழ்வார்கள், குருமார்களுடைய செயல்களைத் திருமால், கனவில் தோன்றி வழிப்படுத்துவதாக அவர்களுடைய ‘வரலாறு’ போன்ற புராணக் கதையான ‘குரு பரம்பரை’ கூறும். பக்தியின் ஆற்றலால், வழிபாட்டுக்குரிய தெய்வங்களோடு நேரில் பேசுகிற சாமியார்கள்மீது பெருமதிப்பு வைக்கும் நாடு இது. இவ்வாறு பேசுவது, கனவு காண்பது, காட்சிகள் இவை யாவும் கடவுளர்களின் பிரியத்துக்குரியவர்களுக்கே நிகழும். வேறு யாருக்கும் தெரியாது. கடவுள் வெளிப்படுத்திய நிலையான உண்மைகளே, சமய நூல்களில் காணப்படுகின்றன என்று மதச்சார்பாளர்கள் நம்புகிறார்கள். மதஸ்தாபகர்களுக்கு எல்லாம் இப்படியொரு வாழ்க்கை நிகழ்ச்சியுண்டு என்று அவ்வம்மதவாதிகள் நம்புகிறார்கள். இதனை ஆகமம், நூல் என்று சமயக்கணக்கர் வாதங்களைக் கேட்ட காதையில் மணிமேகலை கூறுகிறது.

விஞ்ஞானத்தின் அடிப்படைக் கருதுகோள் இந்த நம்பிக்கைகளுக்கு விரோதமானது. அதன் முக்கியமான சிந்தனைகள் வருமாறு:

இவ்வுலகம் அடிப்படையில் பொருளால் ஆனது. பொருள்களிலேயே உள்ளார்ந்து இருக்கும் நியதிகளால் பொருள்-இயக்கம் தோன்றுகிறது. ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்ற கடவுளை நம்புவோரின் கூற்றை அணுக்கள் தங்களுடைய சக்தியாலேயே அசைகின்றன, அவனது தலையீடு அவசியமில்லை என நவீன அணுவியல் ருசுப்பிக்கிறது. பலிகளாலும், காணிக்கைகளாலும், ஜபங்களாலும், பிரார்த்தனைகளாலும் மாற்றமுடியாத விஞ்ஞான விதிகளுக்குட்பட்டு பிரபஞ்ச இயக்கம் நிகழ்கிறது. இதனால் மனிதன் விஞ்ஞான விதிகளின் கையில் ஒரு பந்து போல

26