பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயக்கத்திற்கு கடவுளைக் காரணமாக்காமல் பொருள் தனது இயற்கையால்தான் பரிணாம மாற்றம் அடைகிறது என்று கூறுவதால் சாங்கியவாதிகள் சுபாவ்வாதிகளே.”

ஈஸ்வர வாதத்திற்கும், சுபாவ வாதத்திற்கும் நடைபெற்ற தத்துவப் போராட்டம், மிகப் பண்டைக் காலத்தில் மதத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் நிகழ்ந்த போராட்டமாகும். முதன்முதல் சுபாவவாதம் எந்தத் தத்துவப போக்கோடும் தொடர்பு கொள்ளாமல் சுதந்திரமான கருத்ததாக இருந்தது. பொருள்முதல்வாதிகள், தங்கள் கொள்கைகளை வலுப்படுத்திக்கொள்ள இக்கொள்கையைத் தங்கள் தத்துவ உள்ளடக்கத்தோடு இணைத்துக் கொண்டார்கள். சுபாவவாதம் என்பது நாத்திகம் மட்டுமன்று, பொருள்கள் மாற்றம் அடைவதற்குக் காரணம் அவற்றின் சுபாவமே என்ற விஞ்ஞான கருத்தும் அதில் உள்ளது. இதுவே விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் என்று கூறலாம்.


5. நாத்திகம் பற்றி மார்க்சீயவாதிகளின் விமர்சனம்

ண்டைய இந்திய நாத்திகம், பண்டைய கிரேக்க நாத்திகம், தற்கால ஐரோப்பிய நாத்திகம் ஆகியவற்றின் தத்துவக் குறைபாடுகளை மார்க்சீயம்தான் போக்கி முழுமையாக்குகிறது.

“பண்டைக் கால நாத்திகத்தின் முக்கியமான பலவீனம் என்ன?” என்ற கேள்வியிலிருந்து நமது வாதத்தைத் தொடங்குவோம். நமது தத்துவவாதிகள் மிகத் திறமையான தர்க்கவாதங்களை, கடவுள் ஒரு மாயை, மன விகாரம் என்று நிரூபிக்க உருவாக்கியுள்ளார். இவ்வாறு கடவுளைப் படைக்கப் பிழையாக தருக்க முறைகளைக் கடவுள் நம்பிக்கையுடைய தத்துவவாதிகள் பயன்படுத்தியுள்ளார்கள். இந்திய நாத்திகவாதிகளது தருக்கத்

32