பக்கம்:இந்திய முதற் சட்டம் (நாடகம்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்ன அரசாங்கப் பொதுப்பணி அமைச்சர் உயர் திரு. மீ. பக்தவத்ஸலம் அவர்களது அணிந்துரை வித்வான் பரமசிவானந்தம் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். எனவே, அவர் தொகுக்கும் நூல் களுக்கு முகவுரை தேவையில்பே. ஆல்ை அவர் வரைந்த இந்திய முதற் சட்டம் என்ற நூல் நம் விசேஷ் பாராட்டுதலுக் துரியது. இது ஒரு நாடக நபமான நூல். எதிர்காலக் கிராம எழுச்சியைச் சித்தரிப்பதாகும். நம் குடியாட்சியில் கிராமத் தொண்டைச் சட்ட பூர்வமாக அமைக்கும் ஒரு கற்பனைக் கதை இந் நாடகத்தில் அமைந் திருக்கிறது. கிராம முன்னேற்றமின்றி நம் நாடு உயர்நிலை அடை யாது என்பது யாவரும் உணர்ந்து ஒப்புக் கொள்ளும் விஷயம். ஆல்ை அதைச் சாதிப்பதில் கவனம் செலுத்தி வழி தேட வேண்டும். இத் தொண்டில்தான் ஆசிரியர் ஈடுபடுகிறர். கிராமத் தொண்டின் அவசியத்தை நிர்ப்பந்த மாகவே வற்புறுத்த வேண்டுமென்பதை இந் நூலில் எடுத்துக் காட்டுகிறர் நிர்ப்பந்தமே நசியை உண்டாக்கு மென்பது ஆசிரியரின் கோட்பாடு. கிராமச் சீர்திருத்த வேலேயே குடியரசு கவனம் செலுத்த வேண்டிய முதல் விஷயம் என்பதைத் தம் நூலின் பெயரினல் ஆசிரியர் விளக்குகிறர்.