உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i விடுதலைக்குப்பின் தமிழ்க் கவிதை 119 C கவியரங்கக் தமிழ்க் கவிஞர்களுக்குப் புதிய வரவேற்பும் கிடைத்தது. கவிதைகள்' தமக்கென்று ஒரு போக்கும், நோக்கும் கொண்டதாய் வளரத் தொடங்கிற்று. இத்துறையில் பலர் தம் திறனைக் காட்டத் தொடங்கினர். தமிழ்நாட்டுக் கவியரங்குகளில் ஒரு பொலிவையும் வலிவையும் ஊட்டியவர் மாண்புமிகு தமிழக முதல்வர், தமிழவேள் டாக்டர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் ஆவர். டாக்டரின் கவிதைகளில் எதுகையும், மோனையும், சொல் ஜாலங் களும் மிகுந்திருக்கும். உரையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று கூறத் தக்க நிலையில் அவை அமைந்திருக்கும். யாழின் இசையும், புயலின் வேகமும், மின்னலின் தெறிப்பும், இடியின் முழக்கமும் அவர் பாடல் களில் தோன்றித் தோன்றி மறையும். கவியரங்கில் கலைஞர்' என்ற அவரது நூல் தமிழுக்குக் கிடைத்த ஓர் அருங்கலைச் செல்வம். புதிய தமிழ்க் கவிதையின் வளர்ச்சியைக் காட்டும் ஓர் எல்லைக் கோடு. " - . கவியரங்கக் கவிதைகளுக்கு வளம் மூட்டிய கலைஞர்களுள் குறிப் பிடத்தக்க மற்றொருவர் அப்துல் ரஹ்மான். இந்த ஆண்டு - தில்லி அனைத்திந்திய வானொலி நடத்திய கவியரங்கில் அப்துல் ரஹ்மான் பாடிய பாடலின் ஒரு பகுதியைக் காண்போம். 'சுதந்திரப் போராட்டம்' பற்றிப் பாடப்பட்ட கவிதையிது: . உடல் தூரிகைகள் கண்ணீர், வியர்வை, ரத்த வண்ணங்கள் தோய்ந்து தியாகத் திரைச் சீலையில் தீட்டிய சித்திரம் இந்தச் சுதந்திரம். எம்தானைத் தலைவனோ புதிய பாரதப் போரின் புதுக்கீதைக் கண்ணன் ; அவன் ஆயுதம் ஏந்திநின்ற அர்ச்சுனரைக் கூட நிராயுதமாய் நிற்க வைத்தே நிகரில்லா வெற்றி பெற்றான்- அறுவை கிசிச்சையின் ஆபத்து இல்லாமல், அவன் - சுதந்திரப் பிரசவத்தை சுகமான பிரசவமாய் ஆக்கி வைத்த மருத்துவன்- இந்த நாள் அதிசய நாள் சேய்க ளெல்லாம் கூடித்