132 இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ் மன்றமே! என்பது அவரது புகழ்பெற்ற தாலாட்டு வரிகளாகும். கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் அவரை ஓர் உலக மகா கவிஞராக உயர்த்திக் காட்டுகிறது. "யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என்ற பாடலில் நிலையாமை என்ற தத்துவத்தை அவர் பாடி இருக்கும் அழகு செயல் மறந்து பாராட்டற் பாலதாகும். "A poet should express the emotion of all the ages and the thought of his own' " என்று தாமஸ் ஹார்டி என்பார் கூறுவார். எல்லாக் காலத்துக்கும் உரிய பொதுவான உணர்ச்சிகளைப் பாடுவ தோடல்லாமல் ஒவ்வொரு கவிஞனும் அவனவன் காலத்துக்குரிய உணர்வுகளையும் பாடவேண்டியதும் அவசியமே. காதல், இயற்கை, தத்துவம் முதலியவற்றை மட்டுமே கண்ண தாசன் பாடவில்லை. இந்தக் காலத்திற்கே உரிய பொருளாதாரத் தத்துவமாகிய சமதருமத்தையும் தேனூறப் பாடுகிறார். "கடலென நிறைந்தவன் தொழிலாளி-- அதில் படகென மிதப்பவன் முதலாளி கடலுக்குச் சினம்வந்து அலைமோதி - வரும் முடிவினில் கிடைப்பது சமநீதி - இருப்பவர் 'ஏழைக்கும் கொடுக்க வைப்போம் - அவர் கொடுக்கவில்லை எனில் எடுக்க வைப்போம் பசியெனும் வார்த்தையைப் பறக்க வைப்போம் - அதில் பாரத தேசத்தைப் பிழைக்க வைப்போம்! என்பது கண்ணதாசனின் சோசலிஸப் போர்ப் பரணி ஆகும். கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசில் நடந்த குழப்பங்களும், குளறுபடிகளும், அதன் விளைவான கட்சிப் பிளவும் பிறவும் கவிஞரின் மனத்தை உறுத்தின. பிரதமர் இந்திராவைப் பாராட்டும் வகையில் கண்ணதாசன் பாடிய, 'செவத்தம்மா' என்ற உருவகக் கதைக் கவிதை ஓர் அற்புதப் படைப்பாகும். தத்துவப் பட்டினம் என்றொரு ஊரில் தர்மத்தின் ஆலயம் உண்டு- சம தர்மத்தின் தேவை உண்டு - அங்கு சத்திய பூசைக்கு வெள்ளைக்கலை கொண்ட
பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/165
தோற்றம்