உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 (2) c. (3) 85 இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும் அடிமைக்கட்டு முறிபட அக்ரமங்கள் சிதறிட மடமைத் துன்பம் பொடிபட மங்களங்கள் பொலிவுற காணுங் கண்ணைப் போலவே கையுங் கையும் போலவே ஆணும் பெண்ணும் வாழவே அழகிலின்பம் சூழவே - சிங்கநாதம் - பக்கம் 56 என்ற அடிகளில் எத்துணை வீரமும் ஆழ்ந்த கருத்தும் அமைந்துள்ளன பார்மின். முன்னேற்ற முழக்கம் என்ற முற்போக்கு நூலின் நயமான சில பகுதிகளை நுகர்வோம். (1) ஊருக்கு நல்லது செய்வோம் உழைப்பினில் உயிரைப் பெய்வோம் தூருக்கு நீரும் உரமும் தோட்டக் கனியாய் வருமே (2) அழுதுவடிந்தால்மூ தேவி அடுத்து முயன்றால் சீதேவி உழுது விதைத்தால் பயிராமே உழைப்பில் வளரும் உலகாமே (3) ஆழ ஆழச் சென்றால் அணிமணி முத்தம் உண்டாம் வாழத் தெரிந்தால் உலகில் வகைவகை யின்ப முண்டாம் - முன்னேற்ற முழக்கம்-பக்கம் 90 குழந்தையே கடவுள். கடவுளைக் குழந்தையாகக் கொண்டு எழுந்த தமிழ் நூல்கள் தமிழில் எத்துணை எத்துணை? நம் தேசிய கவி கண்ணனைக் குழந்தையாகக் கொண்டு கனிந்து பாடிய பாடல்களை உலகறியும். சுத்தானந்த பாரதியாரின் குழந்தை உள்ளத்தினையும் காண்போம். ஆடும் குழந்தையின் தளர்நடையினைக் கண்டு கள்வெறி கொள்கிறார் சுத்தானந்தர். 6 ஆடும் குழந்தையிலே - கண்ணன் ஆடிவரக் கண்டேன் - ஓடும் குழந்தையிலே - முருகன் ஓடிவரக் கண்டேன்