உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்ச்சி - ஆராய்ச்சித் துறையின் ...... திட்டங்களும் 167 பின்னர் இந்தியாவின் தென்கோடியிலிருந்த 'மதராஸ் மாநிலம்' தமிழ்நாடாக' மலர்ந்து அனைவர் காதிலும் தேனைக் கொணர்ந்து பாய்ச்சியது ; 'சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே' என்று பாரதி யாரின் வழியிலும், தமிழே தமிழினத்தின் 'உரிமைப்பயிருக்கு வேர்' என்ற பாவேந்தரின் நெறியிலும், நின்று புகழ்கொண்ட பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் 1969ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 23ஆம் நாள் தமிழ்நாடு சட்டப் பேரவை " 'ஐந்தாண்டுக் காலத்திற்குள் தமிழ்நாட்டில் தமிழ் எல்லாக் கல்லூரிகளிலும் பயிற்சிமொழியாகவும், பாடமொழியாகவும், பல்வேறு துறைகளிலும் ஆட்சிமொழியாகவும் நடைமுறைக்கு வருவதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வ தென்று இம்மன்றம் தீர்மானிக்கிறது" என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இது, தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்யத் தமிழர் மேற்கொண்டிருந்த முயற்சிகளுக்கும் புத்துயிர் அளித்தது. ஆட்சிமொழி: நகராட்சி, சிற்றூரின் நல்லாட்சி, மாவட்ட ஆட்சி என்று புகல் கின்ற பல ஆட்சிக் கழகங்கள் எவற்றிலுமே புக நினைப்பார் தகு புலமை குறிக்கின்ற சான்றுதர வேண்டுமென்று சட்டம் செய்தால் அகலுமன்றோ தமிழ்நாட்டின் அல்லலெல்லாம்; அல்லாக்கால் அமைதி உண்டோ?" என்று வினவினார் பாவேந்தர் பாரதிதாசனார் தமிழக அரசு ஊழியர்கள்,பாரதிதாசனாரின் வினாவிற்கு விடை கூறும் வகையில் தமிழர் தம் நிலை, நெறி, தேவை, வாழ்வு இவை யனைத்தையும் ஒருங்கறிந்து தமிழ்நாட்டின் அல்லலெல்லாம் அகலும் வகையில் பணிபுரிய ஆட்சிமொழிச் சட்டங்கள் இயற்றப்பெற்றன. ஆட்சிமொழியைச் செயல்படுத்துவதற்கு மூன்று நிலைகள் உரு வாக்கப்பட்டன. முதல் நிலையாகச் சார்பு நிலை அலுவலகங்கள் அனைத்தும் தங்களுக்குள் கடிதப் போக்குவரத்துக்களைத் தமிழில் அனுப்பவேண்டும் என்றும், இரண்டாம் நிலையாக, துறைத் தலைமை அலுவலகங்கள் அனைத்தும் இம்முறையைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டுமென்றும், மூன்றாம் நிலையாகத் தலைமைச் செயலகம் ஆட்சி மொழிச் சட்டத்தின் வழி செயற்படவேண்டும் என்றும் சட்டங்கள் வகுக்கப்பட்டன. தொடக்கத்தில் பொது (தமிழ் வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள எல்லாப் பிரிவுகளிலும், அலுவலகங்களிலும் தமிழ்மொழி முழுமையாகச் செயற்படுத்தப்பட்டது. இதனையடுத்து, சட்டம், நீதி ஆகிய துறைகள் நீங்க ; பிற துறைகள் அனைத்தும் ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றத் தொடங்கின. தற்போது சட்டம், நீதி, சட்டமன்றம், சட்டப் பேரவை முதலிய துறைகளும் அரசு அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பின் னொற்றித் தமிழ்த் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. தலைமைச்