உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 ஊரும் பேரும் இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும் 1. 1.1 உயர்திணையாகக் கருதப்படும் மனிதன் தன் இனவளர்ச்சி நெறியில் மக்களுடனும் உறவினருடனும் குடும்பம் குடும்பமாக இணைந்து ஓரிடத்தே வாழத் தொடங்கினான். அவ்விடம் 'ஊர்' என்று அழைக்கப் பெற்றது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நில அடிப்படையில் பெயர்பெற்ற ஊர்கள் நாளடைவில் மனிதனின் செய்கைத் திறத்தால் செயற்கைப் பெயர் பெறலா யின. மேலும் அவ்விடங்களின் தனித்தன்மை, பொதுத் தன்மைகளுக் கேற்ப ஊர்ப்பெயர்கள் வழங்கப் பெற்றன. முதல் இலக்கண நூலாகக் காணப்பெறும் 'ஒல்காப்பெரும்புகழ்த் தொல்காப்பியத்துள் 'ஊரும் பேரும்' என்னும் தொடர் ஈரிடங்களில்' பயிலப் பெறுகிறது. இத்தொடரே நாம் காண இருக்கும் 'தமிழகம் - ஊரும் பேரும்' என்னும் நூலின் பெயருக்கு மூலமாக இருக்கலாம். தொல்காப்பியர் பெயர் களை ஒன்பது வகையாகப் பகுக்கின்றார். நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே; வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே; பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே: பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே : பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே; கூடிவரு வழக்கின் ஆடியல் பெயரே: இன்றிவர் என்னும் எண்ணியல் பெயரொடு அன்றி அனைத்தும் அவற்றியல் பிளவே. மேலும், நன்னூல் உரைக்கும் பெயர்களும் உடன் வைத்து எண்ணற் பாலன : கிளையென் குழூஉமுதற் பல்பொருள்; திணைதேம் ஊர்வா னகம்புற முதல நிலன்; யாண்டு இருது மதிநா ளாதிக் காலம்: தோள்குழல் மார்புகண் காது முத லுறுப்பு; அளவறி வொப்பு வடிவு நிறங்கதி சாதி குடிசிறப் பாதிப் பல்குணம்; ஓத லீதலாதிப் பல்வினை; இவையடை சுட்டு வினாப்பிற மற்றோடு உற்றவை வீறு: நம்பி யாடூஉ விடலை கோவேள் குரிசில் தோன்றல் இன்னன ஆண்பெய ராகு மென்ப. தொல்காப்பியர் நிலப்பெயராகிய இடப்பெயரை முதன்மையாக வைத்து எண்ணுதலால் ஊர்ப்பெயர்களுக்கு இவர்தரும் சிறப்பிடம் பெறப்படும். நன்னூலார் இடத்தில் தோன்றும் பொருளுக்கு முதன்மை கொடுத்துப் பொருள்களுக்கு இடமான இடத்தை அடுத்துக் கூறுகிறார். இங்கும் இடத்தின் சிறப்பு விளங்கத் தடையில்லை. கு