கல்கியின் விடுதலை இயக்க நாவல்களில் காந்தியம் 211 வரலாற்று நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டு சமுதாய நாவல் என்று பார்க்கும் பொழுது அவர் படைத்த படைப்புகள் அழியாத ஓவியங் களாகும். ராகவனின் வாழ்க்கை, அவன் காதல் உள்ளம், வீரம், வெறுப்பு விருப்புகள், செயல்படும் திறன் உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சிகளாகும். கண்ணிழந்து அழகே அழிந்து நிற்கும் ஒருத்தியைக் கரம் பிடித்து வாழ்க்கைத் துணையாக அவன் ஏற்கும் உள்ள உயர்வு அழியாத ஓவியமாகும். சீதா அவனோடு வாழ்க்கைப்பட்டதற்குப் பெருமைப் பட வேண்டியதுதான். வசந்தியைப் பெற்று எடுத்துத் தாரணியிடம் விட்டுச் செல்லும் சீதா அமைதியான வாழ்வைப் பெறுகிறாள். நல்ல காலம். ஆசிரியர் சீதாவைத் தேர்தல் உலகில் உழல வைத்ததோடு நிறுத்திக்கொண் டார். முகவெட்டு இருக்கிறது என்பதால் திரைப் படத்துக்கு அவள் போயிருக்கலாம். அந்த வாழ்க்கையில் அவளை உழலவிடாமல் அகதி முகாமுக்குள் அழைத்துச் சென்றுவிட்டார் ஆசிரியர்.காந்தியின் புன்னகையும் கல்தூரிபாயின் வாழ்வும் பாதையும் திரையுலகத்துக்குச் செல்லவொட்டாமல் அவளைத் தியாக வாழ்வில் புகுத்தின. இவ்விடுதலை இயக்க நாவல்களில் காந்தியம் பின்னணியாக இயங்கி இயக்குவது குறிப்பிடத்தக்க செய்தியாகும். அமரர் கல்கி படைத்த தியாக பூமியிலும் மகுடபதியிலும், அலையோசையிலும் காந்தியம் தலை தூக்கி நிற்கின்றது. அதில் வரும் பாத்திரங்களைப் பண்படுத்துவதே காந்தியம் என்றால் மிகை இல்லை. தியாக பூமியில் பிரிந்தவரைக் கூட்டுவிக்க அவர்கள் பெற்றெடுத்த சாருவாலும் முடியவில்லை. சாரு அவர்களை ஒன்று சேர்த்து வைக் கிறாளே தவிர, ஒற்றுமைப்படுத்தி வைக்க முடியவில்லை. நீதிமன்றம் தலையிட்டுச் சொந்த வாழ்க்கையில் ஈடுபட்டு வெற்றி தோல்விகளை உண்டாக்கித் தந்ததே தவிர. உள்ளக் கலப்பை உண்டாக்கி வைக்க வில்லை. சட்டத்தின் அடிப்படையில் அவள் அவனோடு வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்று தீர்ப்புக் கூறப்பட்டது. ஸ்ரீதர் வெளிப்பகட்டுக்கு இரையாகிக் கொண்ட மனைவியைப் புறக்கணித்து ஒதுக்கித் தள்ளி யவன் நீதிமன்றத்தில் வழக்கில் வெற்றி பெற்றவன், வாழ்க்கையில் வெற்றிபெறவில்லை. மகளால் இருவரும் ஒன்றாயினர் என்று கதையை முடித்திருக்கலாம். ஆனால், கல்கி அவ்வாறு செய்யவில்லை. காந்தியம் அவ்வாழ்க்கையில் புத்தொளி ஊட்டியது. கத்தியின்றி ரத்தமின்றிக் காந்தியடிகள் ஏற்படுத்திய யுத்தம் அவர்கள் இருவரையும் கவர்ந்து விட்டது. தியாக ஒளி அவர்களுக்கு ஞான ஒளியை ஊட்டியது. மேல் நாட்டு உடை அவனை விட்டு நீங்கியது. பெண்ணை அடிமைப்படுத்த இயலும் என்ற மடமை அவனை விட்டு மாய்ந்தது. தீய பழக்கங்கள் காந்திய வேள்வியில் மறைந்து சாய்ந்தன.
பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/244
தோற்றம்