உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும் கொண்டு வளர்வது அறிவியல். உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்வது கலை. மனித வாழ்வில் முதலிடம் பெறுவது உணர்ச்சி. அதற்குத் துணைபுரிவது அறிவு. இந்த உணர்ச்சிக்கு விருந்தளிப்பது கலை. அந்தக் கலையின் உயர்ந்த நிலையில் இருப்பது இலக்கியம். இலக் கியம் சொற்களாலான கலை. அதை நுகருவதற்குச் சொற்களில் பயிற்சி வேண்டும்" என்று ஐ. ஏ. ரிச்சர்ட் கூறிய கருத்தை விளக்கு கிறார். இலக்கியம் தோன்றிய காரணம், பாட்டுக்கும். உரைநடைக்கு முள்ள வேறுபாடு, பாட்டு வளர்ந்த நிலை முதலியவற்றை விளக்குகிறார். Poetry begins, I dare say, with a savage beating a drum in the jungle and it retains that essential of percussion and rhythm. அதாவது காட்டு மிராண்டி ஒருவன் தன் பறையை அடித்து முழக் கிய இந்த நிலையில் பிறந்ததுதான் பாட்டு என்று டி.எஸ்.எலியட் கூறிய கருத்தைக் கூறுகிறார். பாட்டு உணர்ச்சிப் பெருக்கின் ஊற்றெடுப்பு: அது உணர்ச்சியில் தோன்றிய அறிவு நிலையில் தொகுக்கப் பெற்றது என்று வோட்ஸ் வொர்த் கூறுவதைக் கொண்டு பாட்டை விளக்குகிறார். 'Poetry is the spantaneous overflow of powerful feelings; it takes its origin from emotion recollected in tranquility." பழந்தமிழ் அகப் பாக்களில் பாலைத்திணைப் பாடல்களே அதிகம். ஏனைய திணைகளிலும் காதலரின் பிரிவுத் துன்பம் இடம் பெறுகிறது. துன்பத்திலும் துயரத்திலும் பாட்டுக்கு உரிய உணர்ச்சி மிகுந்து நிற்கிறது. அதனால் பாலைத் திணைப் பாக்கள் - உணர்ச்சிப் பாக்கள் மிகுதியும் தோன்றின என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ' - "Poetry is rhythmical. Rhythm secures the heightening of phy- siological consciousness so as to shut out sensory preception of the environment" என்று கிரிஸ்டோபர் காடுவெல் கூறும் கருத்தை, "ஒலிநயம் கேட்பவரின் செவி வாயிலாக அவர் உடல் நரம்புகளை இயக்குவது. ஒலி நயத்துக்குப் புலன்களை உள்முகமாகத் திருப்பி விடும் ஆற்றல் உண்டு" என்று கூறி ஏற்றுக் கொள்கிறார். ஒலிநயம் அமையப் பெற்ற வடிவம், அதற்கு இன்றியமையா உணர்த்தும் ஆற்றல் முதலியன பற்றி ஆபர் குரோம்பியின் கருத் துக்களை விளக்குகிறார்.