உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 டாக்டர் பாரதியார் இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும் கைலாசபதியவர்கள், 'இரு மகாகவிகள்', தாகூர், இவர்களின் கருத்துக்களும் அவை தோன்றுவதற்குரிய காரணமான சூழ்நிலை பற்றியும் ஒப்பிட்டு விளக்குகிறார் தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்: ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் கதையின் தோற்ற வளர்ச்சிகளை வரலாற்று முறையில் விளக்குகிறார். மூன்று நாவல்கள் என்னும் தலைப்பில், (1) பிரதாப முதலியார் சரித்திரம். (2) கம லாம்பாள் சரித்திரம். (3) பத்மாவதி சரித்திரம் ஆகியவற்றை ஆய் கிறார். பின்னர், சிவகாமியின் சரிதம்; அலையோசை ஆகிய கல்கியின் இரு நாவல்களை ஆய்கிறார். , முதலில் கதையைச் சுருக்கமாகச் சொல்லி, பின்னர், பாத்திரங் களின் குண இயல்புகளை விளக்குகிறார். இந்த நாவல்களில் படிந்துள்ள அக்கால அரசியல் சமூகச் சாயல்களை நல்ல முறையில் எடுத்துக் காட்டு கிறார். முதல் மூன்று நாவல்களை அவர் விளக்கும் விதம் நாவலைப் படிப் பது போன்ற எண்ணத்தையே உண்டாக்குகிறது. அம்மையப்பப் பிள்ளையின் இயல்பை நகைச்சுவை குன்றாமல் படைப்பாசிரியரைப் போலவே கூறுவது படித்தின்புறத் தக்கது. ஆங்கில நாவல் இலக்கியத்தைப் பின்பற்றித் தமிழில் நாவல் வளர்ந்த வரலாற்றைத் தெளிவாக விளக்குகிறார். ஆரணி குப்புசாமி முதலியாரின் முயற்சி பற்றியும், வடுவூர் துரைசாமி ஐயரின் 'மேனகா', திகம்பர சாமியார் அல்லது கும்பகோணம் வக்கீல் முதலிய கதை களைப்பற்றிக் குறிப்பாகச் சில செய்திகளைச் சொல்கிறார்; ஜே.ஆர் ரங்கராஜூவின், "இராஜாம்பாள், சந்திரகாந்தா" முதலிய நூல் களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். கலைஞரின் கவிதைச் சிற்பம் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் கவியரங்கக் கவிதைகளைப் பற்றி,டாக்டர் மெ. சுந்தரம் அவர்கள் எழுதியுள்ள ஒரு சிறு நூல். பாரதியார், பாரதிதாசனுக்குப் பின் தமிழ்க் கவிஞர் வரிசையில் வெற்றி நடையிடுபவர் கலைஞர் கருணாநிதி. இவர் கவிதைகள் எண்ணிக்கையில் அதிகமில்லை என்றாலும், கவிதைச் சுவையாலும் சமுதாய உணர்வாலும் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிட்டன் எனலாம். தற்காலத் தமிழ்க் கவிஞர்கள் பலர். அவருள், சிறப்பாகக் குறிப் பிடத்தக்கவர் கவிஞர் கவிஞர் சுரதா, கவிஞர் கண்ணதாசன், கவிஞர் கருணாநிதி.