திருக்குறளும் நாமக்கல் கவிஞரும் . 28.5 இங்ஙனம் ஆராய்வது நல்ல திறனாய்வாளனின் இலக்கியப் பண்பே யாகும். அந்த வகையில் கவிஞர் அவர்கள் பரிமேலழகரின் உரையை உற்றுநோக்கியும் ஒப்பு நோக்கியும் ஆய்ந்த ஆராய்ச்சி உரை திரு வள்ளுவரும் பரிமேலழகரும்' என்னும் நூல். பொதுவாக இலக்கியத் தைப் படைக்கும் கலைஞர் இலக்கியத்தை ஆயும் அறிஞராக இருக்க முடியாது என்றும், படைக்கும் திறனும்,ஆயும் திறனும் ஆகிய இரு வகைத் திறன்களும் ஒருவரிடத்து அமைதல் இயலாது என்றும் கூறுவர். ஆனால் இத்தகைய இருவகைத்திறனும் இவரிடத்தில் பொருந்தி விளங்குவதைக் காணலாம். குறள் இலக்கியத் திறனாய்வுத்திறன்: 3 ம் அறிவிலும் கருத்திலும் சிறந்தவற்றைத் தேர்ந்தறிவதற்கும் பரப்பு வதற்கும் உரிய பற்றற்ற முயற்சியே ஆராய்ச்சி". இவ்விலக்கிய ஆராய்ச்சி செய்பவர் ஆர்வத்துடனும் நடுவுநிலைமைதவறா குணம் நாடி குற்றமும் காடும்' பண்புள்ளவராகவும், 'எப்பொருளிலும் மெய்ப் பொருள் காணும் அறிவு வேட்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லையானால் இலக்கியத்தின் உயிர்நாடியை அறியாமற்போவதுடன் பிறழ உணர்த்தும் நிலைக்கும் ஆளாதல் வேண் டிய அவலநிலை அவர்க்கு வந்து சேரும். . குறளுக்கு உரை செய்து அழியாப் புகழ்பெற்ற பரிமேலழகரும் குறட்பாக்களுக்குச் சில இடங்களில் பிறழ உரை செய்ய நேர்ந்ததைப் புலவர் பெருமக்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்91. மூல ஆசிரிய ரான வான்புகழ் வள்ளுவருடன் ஒப்பப் போற்றப்பெறும் பரிமேலழக ரைப்பற்றிக்கூறும்போதும் நடுவுநிலை பிறழாத நல்லுள்ளத்தோடேயே நாமக்கல் கவிஞர் அவரை அணுகுகிறார். பரிமேலழகரைப் பற்றிய கவிஞரின் ஆய்வு மொழிகள் பின்வருவன : 3:82 "பரிமேலழகரின் உரை மற்றெல்லா உரைகளிலும் மிகச் சிறந்தது என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. தமிழுலகத்தின் நன்றி நிறைந்த வணக்கத்துக்கு உரியவர். தமிழ் மரபையும், தமிழ் இலக்கியங்களையும், தமிழ்ப் பண்புகளையும் தழுவித் தான் மிகுந்த நுண்ணறிவுடன் உரை செய்திருக்கிறார் "பரிமேலழகர் நாம் வணங்க வேண்டிய மிகவும் பெரியவர். அவர் தோன்றியிராவிட்டால் உலக இலக்கியங்களுக்குள் தலைசிறந்த இலக்கியமாகிய திருக்குறள் இந்த வடிவத்தில் நமக்குக் கிடைத்திராது. மூலக் குறள்களின் வைப்பு முறை களும் தடுமாறிச் சிதைந்து கிடந்த திருக்குறளைச் செப்ப னிட்டுத் தந்த அழியாப்புகழ் அவருக்கே உரியது 93. இவை பரிமேலழகரைப் பற்றிய கவிஞரின் புகழ்மொழிகள். ஆனால் குறைகள் கண்டவிடத்துச் சுட்டிக்காட்டிச் செல்லும் நல்லாய்
பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/318
தோற்றம்