உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக்குப் பின் தமிழ் நாடக வளர்ச்சி 325 பெண்ணின் கண்ணீர், வாழ்க்கைச் சுடர், வைரமாலை, புது வாழ்வு, சிவகாமி, தெய்வவொளி, பொன்மலர், தெள்ளமுது, காமக்கண்ணி, அமராபரணம், இராசேந்திரன், படித்தவன், செல்வ மகள் ஆகியவை இவருடையவை. இவற்றுள், சில் போட்டி நாடகங்களில் பங்கு கொண்டு பரிசும் பெற்றுள்ளன. இவை பெரும்பாலும், மாணவ ரிடையே கடமையுணர்வு, சாதி வேறுபாடற்ற நிலை, உழைப்பின் உயர்வு, காதலின் ஆற்றல், நாட்டுப்பற்று ஆகியவற்றைக் கருவாகக் கொண்டுள்ளன். இவற்றுள், பல இரண்டு மணி நேர நாடகங்களாகப் பின்னர் நீட்டியெழுதப் பெற்றுள்ளன. . வானொலி'யால் வளரும் நாடகங்கள் பல. அவற்றுள், ஒரு மணி நேர நாடகங்களும், பதினைந்து மணித்துளி நாடகங்களும் பல. இன்றைய நாடக வளர்ச்சிக்கு வானொலி நல்லதொரு வாயிலாகவுள்ள தெனலாம். மேடை நாடகங்கள்: இன்று நூல் வடிவெய்தி விளங்கும் பல நாடகங்கள் முதற்கண் நாடக அரங்கில் நடிக்கப்பெற்று வெற்றிநடையிட்ட பின்னரே நூல்க ளாக வெளிவந்துள்ளன. ஆனால், மேடையேறியும் நூல் வடிவம் பெறாதவை எத்துணையோ வுள. ரெட்ராகஸ் ரெக்ரியேஷன்சின் அலைகள் ஓய்வதில்லை' என்பது ஒன்றாகும். வெள்ளப் பெருக்கால் ஒரு கிராம இரயில் நிலையத்தில் இரயில் நின்றுவிட, அந்நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் காட்டுவது இது. 'யூனிடி கிளப்பின் 'திக்குத் தெரியாத வீட்டில்' என்பது ஒரு நகைச்சுவை நாடகம். 'ஸ்டேஜ் கிரியேஷன்சின் 'நலந்தானா' 'விசிட் தி கல்கத்தா பிளேயர்சின்' 'தி பெர்பெக்ட் அலிபி' என்ற நாடகங்கள் ஒரு மிக இயல்பான கதையையும், அமைப்புத் திறத்தாலும், நடிப்புத்திறத்தாலும் உயர்த்த யலுமென்பதற்கு எடுத்துக்காட்டாகவுள்ளன. G 2 . சேவா ஸ்டேஜின் 'கைவிளக்கு நல்லதொரு நாடகம். பகை மையை அகிம்சையால் வெல்லு' என்ற காந்தியடிகளின் கொள்கையை மையமாகக் கொண்டுள்ளது. 'கலியாண சூப்பர் மார்கெட்' என்ற நாடகம் மாப்பிள்ளையிடம் வரதட்சணை வாங்க முயல்வதாக அமைந் துள்ள, சீர்திருத்தம் பேசுகிறது. இதில் அரசியல் பொடியும் மிகவுண்டு. , காஷூவல் 'நிம்மதி', மற்றும் நான்கு திசைகள்', 'அண்டர் செக்ரடரி', லீவ்', 'அம்மன் தாலி', 'பசும்பொன்', 'நெஞ்சிற்கு நீதி', குங்குமச் சிமிழ்', 'தேவையொரு தங்கை' முதலியனவும் சென்னையில் பல கழகங்களால் நடிக்கப்பெற்று ஓரளவு புகழ் ஈட்டியுள்ளன. மற்றும் திரு.கே.பாலச்சந்தரின் 'சதுரங்கம்', 'மேஜர் சந்திர காந்த்', 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்,எதிர்நீச்சல்' ஆகியவவை