யா விடுதலைக்குப்பின் கட்டுரை வளர்ச்சியில் மகளிர் பங்கு 389 து, வகைகள் யாவை, யார் யார் கூற்றில் எவ்வெப் பொருள்களின் அடிப்படையில் அமையலாம் என விளக்கப்படுகின்றன. இவை சங்க 23 காலத்து மட்டுமல்லாது இன்றும் இலக்கியங்களில் உள்ளன. சமுதா யத்தில் வாழவேண்டிய மனிதன் அதனோடு ஒட்ட ஒழுகும்படி, உண்மையை மறைத்துப் பொய்நிலையை (Mask of Persona) க்கொள்ள வேண்டியுளது. சங்கச் சான்றுகளுடன் ஆசிரியர் நிற்கவில்லை. உள்ளுறை, முகமூடி நிலை ஆகிய இரண்டுக்கும் பாரதி, புதுமைப் பித்தன், செய்காந்தன், அகிலன், லட்சுமி, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கதைகளினின்றும் விளக்கம் தருவது சிறப்பாக உள்ளது. சங்க இலக்கிய எல்லையில் உரையாசிரியர்கள் விளக்கியனவற்றை மேனாட்டுத் திறனாய்வு விதிகளையும் நம் இலக்கியங் களுடன் அதுவும் தற்கால இலக்கியங்களுடன் கூட்டி உணர்த்துவது எளிதாக அனைவர்க்கும் விளங்குவதாக உள்ளது. . காமாட்சி குமாரசாமி, ந.சரோஜினிதேவி, தரணி பாஸ்கரன் ஆகியோரின் நடை தெளிவான தமிழ்நடை. குழந்தை அம்மாளின் நடை மிகமிக எளியது. சிவபார்வதி அம்மையார் எழுதுவது தெளிந்த இலக்கிய நடை. திருமதி. கிருஷ்ணா சஞ்சீவி அவர்கள் நடையில் சிலப்பதிகார வரிகள் அழகாக ஆளப்பட்டுள்ளன. காமாட்சி குமார சாமி ஓரிடத்தில் 'விலைமாதாம் மாதவி' என்பது ஆயத்தக்கது. இலக்கணம் இலக்கணக் கட்டுரைகள் மிகச் சிலவே உள்ளன. அக்கட்டுரை களும் வேற்றுமொழி இலக்கணத்துடன் தமிழிலக்கணத்தை ஒப்பிடு வது; தமிழிலேயே வேறு காலங்களில் தோன்றிய நூல்களை ஒப்பிடுவது என இருவகையா யமைகின்றன. தொல்காப்பியம், அஷ்டாத்யாயி ஆகிய இரு இலக்கண நூல்களையும் ஒப்பிட்டுத் தொகை களின் அமைப்பு எவ்வாறுளது என ஆயலாம். வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, வேற்றுமைத்தொகை நான்கும் வடமொழி தமிழ் ஆகிய இருமொழிகளிலும் உள்ளன. தமிழில் தொகைகள் தன் விளக்கம் தருவனவாகவுள்ளன. விளக்கம் தரவல்ல உறுப்பு தொக்கி நிற்பதால் பெயர் பெறுகின்றன. மொழியில் இவ்வாறன்று. வேறுபாடு மிகுதி. 30 ம ஆகிய வட இவ்வண்ணமே இருமொழிகளிலும் உள்ள வேற்றுமைகளும் ஒப்பு நோக்கப்பட்டு ஒற்றுமை, வேற்றுமைகளும் விளக்கப்படுகின்றன. தொல்காப்பியம் விளக்கும் வேற்றுமை அமைப்பு முறைக்குப் பாணினி யின் முறைக்கும் மிகுந்த வேறுபாடுண்டு. தொல்காப்பியத்தில் எளிமை உண்டு. பாணினியில் பல் சிக்கல்கள் உ ண்டு. 31 யனைத்தையும் டாக்டர் மீனாட்சி அவர்களின் ஒப்பியல் ஆய்வில் தெளியக் காணலாம். இவை செய நிகழ்கால வினையெச்சமென்றொன்று சங்ககாலத்து இல்லை என்பது முக்காலத்துக்கும் பொதுவாயிருந்தது. சங்க இலக்கியங்
பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/422
தோற்றம்