404 இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும் கொண்டது. இந்தியா சுதந்திரம் பெற்றபின் தமிழ் மக்களது அக வாழ்விலும் புறவாழ்விலும் சலனங்களும் மாற்றங்களும் ஏற்பட்டுச் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன. இவற்றுக்கு இடையே இழிநிலைகளை அழித்தொழிக்கும் புதியதோர் சக்தி துளிர்க்கிறது. இதை இன்று மறைத்துவிட்டாலும் முடிவில் அச்சக்தியே வாகைசூடும் என்ற யதார்த்தத்தைச் சித்திரிக்கும் ஒரு முயற்சியே இந்நாடகம் என்பர் ஆசிரியர். . 55 இக்கதையைப் படிக்கத் தொடங்கும்போதே ஆசிரியர் உள்ளத்தை நிறைத்து நின்ற தடை 'சாதி வேற்றுமை' என்பதை நாம் உணரு கிறோம். என்னவே, சுதந்தரம் வந்திட்டா மேல்குலம் கீழ்குலமிங் கிறது எல்லாம் இல்லாமல் போயிருமா?" என்றுதான் கதையே தொடங்குகிறது. , மாடசாமிக் குடும்பன் மகன் ஈசாக்கின் குடும்பம் கிறித்தவக் குடும்பம். மகள் மாடத்தி குடும்பம் இந்துக் குடும்பம். இவ்விரு குடும்பங்களுக்கிடையேயுள்ள சச்சரவில் மாடசாமி சிக்கித் தவிக் கின்றான். நிலத்தை அடகுவைத்த மாடசாமியிடம் பணம் கொடுத்த காந்திமதிநாத பிள்ளை மூன்று ஆண்டுக்குரிய நெல்லையும் சேர்த்து அளக்கும்படி சொல்ல, விவசாய சங்கம் கூடித் தீர்ப்பு செய்யுமுன் அனைவரையும் போலீஸ்வண்டியில் சிறைப்படுத்துகிறார் காந்திமதிநாத பிள்ளை. மாடசாமி தன் பேத்திக்குப் பிறந்த பச்சிளங்குழவியை எடுத்துக்கொண்டு போலீஸ்வண்டியின் பின்னால் ஓடி விழுந்து உயிர் துறக்கின்றான். குழந்தை மார்பில் படுத்திருக்கிறது. மாடசாமியின் மகன்வயிற்றுப் பேத்தி காரில் வந்து அவளை அடையாளம் கண்டு குழந்தையைத் தூக்கிக்கொள்கிறாள். உயிர் வற்றிச் சருகாகிவிட்ட மாடசாமியையும் புதுமலராக உலகில் தோன்றியுள்ள குழந்தையை யும் காட்டி கதைத் தலைப்பின் பொருத்தத்தை விளங்கச் செய்கிறார் இதன் ஆசிரியர். பாண்டி நாட்டுக் கிராமத்தவர்தம் மொழி இட ை யிடையே 'செலவடைகளோடு செறிந்து படிப்பவர்க்கு இனிமை தருகிறது. 1 கல்லூரிப் பேராசிரியர்களாகச் சிறப்புற்று வாழும் தமிழறிஞர் களும் படைப்பிலக்கியங்களைத் தோற்றுவிப்பதில் சளைத்தவர்கள் அல்லர் என்னும் கூற்றுக்கு இலக்காக அமைபவர் திருமதி.ஹெப்சிபா ஜேசுதாஸ் அம்மையாராவர். 'புத்தம் வீடு', 'டாக்டர் செல்லப்பா என்ற இவரது இரு நாவல்களும் ஒன்றோடொன்று கதைப்போக்கில் தொடர்புடையன. தங்கராசு என்பவனைச் சுற்றிச் சுழலும் எளிய கதை அமைப்புக்கொண்டது புத்தம் வீடு. பனையேறும் மக்களது வாழ்வியல் நிகழ்ச்சிகள் நன்கு படம்பிடித்துக் காட்டப்பெறுகின்றன. இச் சமுதாய இயல்பினை நோக்குமிடத்து, 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல, எளிய கதை நிகழ்ச்சியும்கூட ஆற்றல்வாய்ந்த ஆசிரியர் கையில் வலிவும் பொலிவும் பெறும் என்பதை அறிகின்றோம்.
பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/437
தோற்றம்