உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 களஞ்சியம் இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும் தொகுக்கப்படும் - நெறிமுறைகளை நேரிற்கண்டறியத் தமிழகத்திற்கு வந்து சென்றார்கள். இந்தத் தொகுதிகளை அடி யொற்றிப் பலமொழிகளிலும் பிறகு கலைக் களஞ்சியங்கள் வெளி வரத் தொடங்கின. காட்டில்,10,000 விடுதலையுற்ற ஒரு சுதந்திர நாட்டில், 10,000 ஆண்டுகள் தொடர்ந்த பாரம்பரியமும், பண்பாட்டு வளமும், நூற்பரப்பும், 5 கோடி மக்க ளுக்கு உரிமையும் உடைய தமிழைப் போன்ற ஒரு பழம்பெரும் மொழியில் இன்னும் பலப்பல துறைகளில் கலைக் களஞ்சியங்கள் தோன்ற வேண்டும். குழந்தையர் கலைக் களஞ்சியத்தின் ஆறு தொகுதிகள் முடிந்து ஏனையவும் விரைவில் நிறையக்கூடிய நிலையில் உள்ளன. வேண்டிய எல்லாவகைக் கலைக் களஞ்சியங்களையும் தொகுத்து முடிக்க இன்னும் 50 ஆண்டுகளும் பிடிக்கலாம். அப்பால் அவற்றைத் துல்லியமாகத் திருத்தியும் புதுக்கியும் வெளியிட மேலும் பல்லாண்டுக ளாகலாம். பெரிதும் முன்னேறிய நாடுகளில்கூடக் கலைக் களஞ்சிய அலுவலகங்கள் நிரந்தரமாக நிறுவப்பெற்றுப் பணியாற்றுகின்றன. அப்பணிகளின் விரிவைச் சுருக்கங் கருதி இங்கு விரிக்காமல் விடுகின் றேன். எனினும் நான் உணர்த்த விரும்பும் ஒரு குறிப்பு யாதெனில், தமிழகத்தில் நிரந்தரக் கலைக் களஞ்சிய அலுவலகம் ஒன்று நின்று பணியாற்ற வேண்டும் என்பதேயாகும். தமிழை - தமிழகத்தை, நிகழ்கால வருங்கால அறிவுக் களஞ்சியத்தோடு இணைக்க இந்த ஏற்பாடு இன்றியமையாதது. கலைக்களஞ்சியத்தை அடுத்துக் குறிப்பிடத் தக்க புதுமை நூல்கள் தமிழக அரசின் தமிழ் நாட்டுப் பாடநூற்கழகம் அன்றும் இன்றும் வெளியிட்டு வருகின்ற நூல்களின் தொகுதி. கலைகள் பற்றியும் விஞ்ஞானம் பற்றியும் ஏறத்தாழ 500 நூல்களை வெளியிட்டிருக் கிறார்கள்.50,000, 500000 நூல்கள் வெளியாக வேண்டிய முயற்சியில் 500 நூல்கள் மட்டும் வெளியாகியுள்ளன. புதுமுயற்சியாதலின், வெளியீட்டு ஏற்பாடுகளிலும், மொழி பெயர்ப்பிலும், தமிழாக்கத்திலும், மொழி நடையிலும், கருத்து விளக் கத்திலும் குறைகள் காணப்படினும் இந்த மாபெரும் முயற்சியைப் போற்றி எல்லோரும் தோள்கொடுத்துத் தாங்கி வளர்க்க வேண்டும். இம்முயற்சி எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதுபற்றி ஒரு சொல் சொல்ல விழைகின்றேன். 10,000 ஆண்டுகளுக்கு மேலாக மனித சமுதாயம் உலகத்தின் பல்வேறு கண்டங்களிலும் சேர்த்துத் திரட்டிவைத்துள்ள அறிவுச் செல்வத்தை - ஞான பண்டாரத்தை - ஐந்துகோடித் தமிழ்மக்களுக்கு எடுத்து வழங்கச் செய்யும் முயற்சி தான் அது. குழந்தையர்க்கும், இளைஞர்களுக்கும், அறிஞர்களுக்கும், --