16. இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும் கின்றன. வேறொரு இரஷ்ய அறிஞர் வழி பாரதியார் பாடல்களில் 1000 வரிகளுக்கு மேல் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்தேன். மற்றும் ஐரோப்பாவின் நால்வேறு திசையிலுமுள்ள பல்வேறு நாடுகளிலும் ம் அலைந்து அங்குள்ள நூலகங்களில் கடந்த 300 ஆண்டுகளாகத் தமிழகத் திலிருந்து கொண்டு செல்லப்பட்ட 2000 தமிழ்ச் சுவடிகளைக் கண்டு, அவற்றுக்குத் தனித்தனி விரிவான பாயிரக் குறிப்புக்கள் எழுதி அட்டவணைப்படுத்தித் தமிழக அரசுக்குத் தந்திருக்கிறேன். விடுதலை யுற்ற நாடானதால்தான் நான் அங்கெல்லாம் செல்லவும் இவற்றை யாற்றவும் முடிந்தது. நிற்க, மேற்குறித்த கலைக் களஞ்சியத்தையும் தமிழக அரசின் 500 புதுமை நூல்களையும் தவிர, ஒவ்வொரு பொருள்பற்றி ஆங்காங்கு இரண்டொரு நூல்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் புதுமை நூல்களாக வெளிவந்துள்ளன. இவை போல்வன இந்திய விடுதலை நிகழ்ந்தாலும் நிகழாது போயினும் ஆங்காங்குத் தோன்றக்கூடியனவே யாம். இருப்பினும் ஒன்றேயாயினும் சிலவேயாயினும் கொண்டாடு கின்றோம். அவற்றைப் போற்றிக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் ஒரு மாபெரும் நாட்டின் சுதந்திரத்தையும் அதன் 25 ஆண் டுக் காலத்தையும் உலகம் செல்லும் வேகத்தையும் கணக்கில் கொண் டால், இவை யாவும் அலைமோதுவதால் கரையில் தெறிக்கின்ற சில நீர்த்துளிகளுக்கே சமனாகும். அடுத்துத் தமிழில் புதுமை நூல்கள் எழுதுவது பற்றியும் அவற்றை வழங்குவது பற்றியும் சில குறிப்புக்களைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். ஐந்தாண்டுத் திட்டங்களில் எல்லாச் செல்வமும் மக்களுக்குக் கிடைக்க வகை செய்வது போல் 10,000 ஆண்டுகளுக்கு மேலாக மனித சமுதாயம் சேர்த்துவைத்துள்ள - கடல் போல் விரிந்த -- அறிவுச் செல்வம் தமிழக மக்கள் எல்லோர்க்கும் கிடைக்கும்படிச் செய்ய இத்திட்டங்களில் வகைசெய்ய வேண்டும். தமிழ் வளர்ச்சிக்கான திட்டமும், தமிழில் அறிவியல் நூல் வெளியீட்டிற்கான திட்டமும் ஒவ்வோர் ஐந்தாண்டுத் திட்டத்திலும் பெரும் பெரும் அளவில் இடம்பெற வேண்டும். கூடவே, இன்னொன்றும் சொல்லுவேன்: தமிழ் வளர்ச்சியைப் பொறுத்தமட்டில் தமிழ் நாட்டளவில் கடுமையான், பாதுகாப்பும் விறுவிறுப்புமுள்ள திட்டங்கள் இல்லையேல், தமிழ- கத்திற்கு அப்பால் வேறு யாரும் இதுபற்றிக் கவலைப்படமாட்ஈர்கள். இது என் கருத்து, சரித்திர உண்மை. தமிழில் புதுமை நூல்களை - கலை, அறிவியல் நூல்களைக் கோடிக் கணக்கான நிதியம் செலவிட்டுச் செய்தல் என்பது, தமிழ் எனும் மொழிக்காக மட்டும் அன்று. தமிழைப்பற்றி வேண்டா விருப்போடும்.
பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/49
தோற்றம்