கலைக்களஞ்சியத்தில் டாக்டர் தெ.பொ.மீ....... ஒரு பார்வை 457 பாராட்டலின் நோக்கும் போக்கும் 7.0 புலமையுடையாரைப் புகழும் பெருந்தன்மை இயற்கை நெறிக்காலத்தின் - சங்ககாலத்தின் தனிப்பெரும் பண்பாக விளங்கி யுள்ளதை அக்கால இலக்கியத்தால் அறிகின்றோம். அத்தனிப் பெரும் பண்பு இறைமை நெறிக்காலத்தில் - சமய நெறிக்காலத்தில் தொய்வு நிலையை அடைந்து, 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்துள்ளதை யும் வரலாறு காட்டும். புலமையுடையாரைப் புகழும் அப்பண்பு 20-ஆம் நூற்றாண்டில் மீண்டும் புத்துயிர் பெற்றதெனலாம். அப் பண்பிற்கு உயிரூட்டிய பண்பாளர்களுள் ஒருவராகத் திகழ்பவர்தான் தமிழ்த்தென்றல் திரு வி.க. அவர்கள். 7.1 வாய்ப்பு வாய்க்கும் இடமெல்லாம் வல்லாரை வாழ்த்தும் உயர்நெறியைத் திரு.வி.க. அவர்களிடம் காண்கின்றோம். அவர் நா வாழ்த்தா நல்லாரே இல்லையெனலாம். அப் பெருந்தகையால் பத்தினுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பாராட்டப்படும் சிறப்பினைப் பெற்றவர், அவரோடு அரசியல் சமய இலக்கியத் துறைகளில் நேரடி யான தொடர்பு கொண்ட - அவற்றுள் சீர்மைகொண்ட, பேராசிரியர் தெ.பொ.மீ. அவர்களாவர். தமிழறிஞர் திரு.வி.க. அவர்களின் இந் நல்லுணர்வே, பேராசிரியர் தெ.பொ.மீ. அவர்களின் உள்ளமாம் வீணையில் 'நன்றியுணர்வு' என்னும் பண்ணை மீட்டிவிட்டதெனலாம். அந் நன்றியுணர்வே சமய விற்பன்னர் தெ.பொ.மீ. அவர்கள் ஒரே கட்டுரையில் 16 இடங்களில் தமிழ்முனி திரு.வி.க. அவர்களைச் சுட்டவும் புகழவும் வைத்துள்ளதோ என எண்ணவும் இடமேற்படு கின்றது.27 > 7.2 செந்தமிழ்ச் செல்வர் திரு.வி.க.-வை அடுத்து, இவரால், கலைக்களஞ்சியத்தில் அதே எண்ணிக்கையில், ஆனால் வாய்ப்பு வாய்க்குமிடமெல்லாம் வலிந்து வலிந்து பாராட்டப்படுபவர் மறுமலர்ச்சிக் கவிஞர் பாரதியார் அவர்களே. சமயக் கட்டுரையாயினும் சரி, 'திருக்குறள்' போலும் இலக்கியக் கட்டுரையாயினும் சரி, அங்கெல் லாம் பாரதியாரைத் துணைக்கொண்டே செல்வது இவரது கட்டுரை களில் காணும் ஒரு விருப்பப் போக்காக அமைந்துள்ளது எனலாம். 7.3 பேராசிரியர் தெ.பொ.மீ. அவர்கள் புகழணி சூட்டும் இடங்களில், பாரதியாருக்குப் "சிலர் தாங்கள் தமிழ் நூற்பரப்பில் கண்ட இன்பத்தையெல் லாம் பேசுகிறார்கள். பண்பாட்டு வடிவமாய்த் தமிழினையும் காணும் காட்சி அது. ஆனால், இப்பாடல்களையெல்லாம் 58 செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்ற பாரதி பாட்டைப் பொதுமக்கள் கவிமணி கூறுவதற்கிணங்கத் துள்ளிக் குதித்துப் பாடுவதுபோல் பாட முடியுமா என்பது ஐயமே 392
பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/490
தோற்றம்