உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 பேரறிஞர் அண்ணுவின் நாவல்கள் பேராசிரியர் மா.கி. தசரதன், எம்.எ., முதல்வர், சி.கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி, அண்ணாநகர்,சென்னை. - உடைய விடுதலை வெள்ளிவிழாக் கருத்தரங்கம் இலக்கியத் திருவிழாவாக நடைபெறுவது பொருத்தம் மட்டும் அன்று - பயனும் ஏற்பாடு ஆகும். விடுதலை விழா என்ற பெயரில் ஆகாத நாலுபேரைத் திட்டித் தீர்த்துவிட்டு மன அமைதி பெற்றதாக, நினைத்து ஏமாந்து போகும் விழாக்கள் ஒருபுறம். பயனுள்ள வகையில் பலபேரை வேலை வாங்கும் இத்தகைய நன்முயற்சிகள் ஒருபுறம். இந்த நன்முயற்சியில் ஈடுபட்டுள்ள - இதுபோல் பல நன்முயற்சிகளில் ஈடுபாடு கொண் டுள்ள - இலக்கிய மருத்துவரை - தமிழ்ச் சஞ்சீவியை - பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையின் புதிய, ஆனால் புரட்சிகரமான தலைவரை இந்தத் தலைவரின் விடுதலையான வளர்ச்சியைப் போற்றி வளர்க்கும் பல்கலைக் கழகத்தை - அதனை நடத்திச் செல்லும் தாமரைச் செல் வரை மனமாரப் பாராட்டி நன்றி செலுத்துகிறேன். - - - - பேரறிஞர் அண்ணாவைத் தமிழகம் நெடுநாள் கழித்துத்தான் எழுத்தாளர் என்று ஏற்றுக்கொண்டது. வெட்கமின்றி — இந்த உண்மையை ஒப்புக்கொள்வதிலே தவறு ஒன்றுமில்லை. ஆனால் பிறர் ஏற்பரோ இகழ்வரோ என்றெல்லாம் எண்ணிடாது ஒளிதந்து உலகு ஊட்டும் பகலவன்போல அவர் எழுதிக்கொண்டே இருந்தார். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எண்ணியவரைப்போல் தாம் கற்ற கல்வியை, பெற்ற அறிவை, இந்த மக்களுக்கு அளிக்கும் முயற்சியில் கையிலே வலுவிருந்த வரையில் ஈடுபாடு கொண்டிருந்தார். இணர் ஊழ்த்தது மட்டும் அல்ல ; நாறும் மலராகவும் விளங்கினார். எனக்குத் தெரியும் இது அண்ணா கருத்தரங்கம் அன்று. ஆனால் முன்னுரை இல்லாமல் நூல் இல்லை ஆனதினால் இந்த முன்னுரை என்னை முந்துகின்றது! அவர் எழுத்தாளர் மட்டும் அல்லர்; நல்ல பேச்சாளர்; திறமான நடிகர்; அருமையான தலைவர்; ஆற்றல் மிக்க ஆட்சியாளர். இத்தனைக் கும் மேலாக நல்ல மனிதர்.