516 இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும் சீனாவும் ஊறிழைக்க நினைத்தபோது, நாடே கொதித்தெழுந்தது.வாணி தாசன் கவிதையில் அக்கொதிப்பை உணர்கிறோம். பாகித்தானைச் சாடு வதைப் பாருங்கள்: போர்என்று கேட்டவுடன் தோள்கள் வீங்கும் புலிக்கூட்டம் நம்கூட்டம்; உடலில் தைத்த கூர்இல்லா வேல்எடுத்தும் பகையை வீழ்த்தும் குறிதவறாச் செயல்வீரர்; வானில் மோதும் கூர்போன்ற களிறெறிவோர் அன்னோர் முன்னர் கள்ளநெறி பாகித்தான் பிழைப்ப துண்டோ? சீர்மிகுந்த பாரதமே வெற்றி கொள்ளும் செந்தமிழில் போர்ப்பரணி பாடு வோமே. உழவுக் காதல் நாட்டுக்குக் காப்பு நல்குவோன் வில்ஏர் உழவனாகிய போர் வீரன். ஆனால் உலகுக்கே ஊட்டம் கொடுப்பவன் நல்ஏர் உழவன் தான்.'வீரன் வெல்க (ஜெய் ஜவான்) என முழக்கம் இட்டால் மட்டும் போதாது. 'உழவன் உயர்க' (ஜெய் கிசான்) என்பதையும் மறக்கக் கூடாது. அடிப்படைகளை ஆராயும் வாணிதாசன் உலகின் அச்சாணியாம் உழவனை மறப்பாரோ? கவிதை உழவாக்கம் இல்லைஎனில் உயிராக்கம் உண்டோ உயிராக்க இல்லைஎனில் ஊராக்கம் உண்டோ விழவாக்கம் பொருளாக்கம் வெற்றிமுர சாக்கம் வீரர்களின் தோளாக்கம் வெளிஉலக நட்பு பழகுமொழிச் சொல்லாக்கம், பகுத்தறிவின் ஆக்கம் பறந்துசென்று நிலவுலகைப் படம்பிடிக்கும் ஆக்கம் அழகுவயல் செந்நெல்லின் அறுவடையால் அன்றி ஆகாதே ஆகாதே ஆகா தாமே." கலைஞர்கள் தாம் கையாளும் கவிதையின் சிறப்பை உணர்ந்து பயன்படுத்துவர். கவிஞர் வாணிதாசனும் தம் கருவியான கவிதை யின் பழமை, அதன் ஆற்றல், அதன் இணைஇலா உயர்ச்சி முதலிய வற்றை நன்கு உணர்ந்தவர். 'மொழியினுக்கு உருவங் காண முற்பட்ட காலந் தொட்டே மொழியினில் உணர்வு தோன்ற முகிழ்த்ததே கவிதை வாழ்க 23 , எனக் கவிதையின் பழமைத் தோற்றத்தைக் கூறும் அவர், அக் கவிதை தமிழகத்தில் வரிப் பாடலாகவும், குரவைப் பாட்டாகவும் வளர்ந்து அகப் பாட்டாய்ப் புறப்பாட்டாய்க் கனிந்த வகையை விளக்குகின்றார்.
பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/549
தோற்றம்