உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைக் கவி வாணிதாசன் கவிநயம் எத்தொழிலைச் செய்தாலும் எவரெவரே யானாலும் அத்தொழிலின் மேன்மையே அவரவரின் பொற்காலம் 519 குடிசைத் தொழில் எனவே கூறிடுவீர் ஆனாலென் நற்றொழிலாம் குடிசைத் தொழிலே குடி செழிக்கும்." நல்லதுளது செய்தாலும் அஞ்சக்கூடாது; அச்சமே தாழ்வனைத் துக்கும் மூல காரணம் என்று கூறுகிறார். "நாமார்க்கும் அடிமை அல்லோம்; நமனையும் நாம் அஞ்சோம்" என அப்பர் பெருமானை, அடி ஒற்றி முழங்குகின்றார். மக்கட் பெருக்கத்தால் நாடும், குழந்தைப் பெருக்கத்தால் வீடும் படும் தொல்லைகளைப் போக்கக் கருத்தடை ஒன்றே வழி என்று முழங்கு கின்றார். ஒன்றிரண்டு நன்மக்கள் போதுமடா அண்ணே ஓயாத தொல்லையடா பலபிள்ளை அண்ணே கருத்தோன்றும் வழிஅடைப்போம் இதில் என்ன குற்றம்" என்றும் கேட்கின்றார். குடும்பத்தின் விரிவே நாடு; குடும்ப நலனே நாட்டின் நலன். கலியாணமாகாத தம்பிகள் எவ்வாறு தம் எதிர்கால வாழ்க்கைத் துணைவியரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் காதோடு காதாகக் கூறுகிறார் கவிஞர். "படிக்காத பெண்களோ கம்பளிப் பூச்சி பண்பிலா திருப்பவள் செந்தேள் சீச்சீ அடிக்கடி அழுபவள் அயலவர் சூழ்ச்சி அடங்காப் பிடாரியால் மனையறம் வீழ்ச்சி பணக்காரப் பெண்களோ பகட்டான பொம்மை பட்டியோ ஊர்ச்சண்டைக் கிழுப்பாளே நம்மை வணக்கமாய் இருப்பவள் வாழ்க்கைக்கு நன்மை மனத்தில்வை மாப்பிள்ளாய் நான்கண்ட உண்மை. அணி நலன் ג, அணிகள் இல்லாத கவிதை பணிகள் இல்லாத பாவை. வாணி தாசன் கவிதைகளில் அணிகளுக்குப் பஞ்சமும் இல்லை; அணிகளின் குவியலும் இல்லை ; கருத்துக்கேற்பக் கச்சிதமாக ஆங்காங்கே ஏற்ற அணிகள் எழிலாக ஒளிக்கின்றன.