உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும் னன் கண்ணப்பன் இதனைக் கண்டு கலங்கி, இறந்துபோன ஆண் கிளியை ஒரு புதரில் வீசியெறிந்துவிட்டுப் பெண்கிளியைக் கூட்டி னின்றும் விடுதலை செய்துவிடுகின்றான். ஆண் கிளியின் பெரும் பிரிவு பெண் கிளியைப் பேதுறச் செய்கிறது. மாலைநேரத்தில் வானத்தில் வந்து முளைத்த பிறைமதி வடிவில் ஆண்கிளியே வந்திருக்கிறதென்று மயங்கி, அதனை எட்டிப் பிடிக்க விண்ணுக்குப் பறந்து, அலைந்து, அலுத் துச் சோர்ந்து மண்ணில் உயிரற்று ஆண் கிளியின் உடல் கிடக்கும் புதரி லேயே வந்து விழுகிறது. உயிரற்ற இரு கிளிகளையும் கண்டு வருந்து கிறான் கண்ணப்பன். தன்னால் விளைந்த தவறு என்று எண்ணி உருகு கிறான். இதுதான் கதை. கிளியை வருணிக்கும் கவிஞர், என்கிறார். கொவ்வைப் பழமென்ற மூக்கும் கற்றுக் 1 கொடுக்கின்ற செஞ்சொற் பயில்கின்ற நாக்கும் செவ்வைப் படுங்குன்றிக் காற்றும் - கண்ணன் சிந்தையி லின்பம் சிறந்திடப் பண்ணும்? நெஞ்சைப் பிழியும் அவலம் இவ்வுருவகக் கவிதையில் நம் நெஞ்சை நெக்குருகச் செய்யும் அவலத்தினைக் காணலாம். பிரிந்தன இரு கிளிகள் - அவை பிரிந்தன சொரிந்தன நீர்விழிகள் எரிந்தன இருகிளிகள் - அவை இடறின் இடறின இடறினவே . என்றும், என்றும், தத்தையம்மா தத்தை யம்மா ஓடிச் சென்றாயோ? - கடல் முத்தையம்மா முத்தையம்மா தேடிச் சென்றாயோ? பூவாரம் ஒன்று நான் கோத்துப் போட்டேன் -- அதைப் போங்காலக் காலன் அறுத்துப் பேரட்டான்! தேவாரம் போனபின் தத்தையம்மா - தமிழ்த் தேனாரம் ஏதடி தத்தையம்மா? என்றும் வரும் பகுதிகள் அவலச் சுவையுணர்வை வெளிப்படுத்து கின் றன.