உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.நெ.து.சு.-வின் இலக்கியப் பணிகள் என்னும் நூலில் மேரிகியூரியையும் "மனிதருள் 5239 . மாணிக்கம் دو 41 278.8 என்னும் என்னும் கட்டுரையில் நேருவையும், "சிறியன சிந்தியோம் கட்டுரையில் சர். சி. வி. இராமனையும், "திரு.வி.க. வின் தமிழ் நடை என்னும் கட்டுரையில் திரு.வி.க.வினையும் "நான் கண்ட சோவியத் ஒன்றியம்' என்னும் நூலில் மாஸ்கோ பல்கலைக் கழகத்தை நிறுவிய மீனவர் மைக்கேல் லோமன் சன்னையும், "உழைப்பால் உயர்ந்த உத்தமர் பஞ்ச்" என்பதன் வாயிலாக நோபல் பரிசு பெற்ற முதல் நீக்ரோ நாவிதரான பஞ்ச்சையும் குழந்தைகளும் பெரியோர்களும் தெரிந்து கொள்கிற வகையில் தெளிவாகவும் அழகாகவும் விளக்கி யுள்ளார். இவ்வாறு பயன்படுகின்ற வரலாற்று - அறிவியல் செய்திகள் தமிழ்ச் சமுதாயத்திற்குத் துணைவேந்தர் பெருந்தகையளித்த அருங் கொடைகளாகும். அறவுரைகள் : "From wise men the world inherits a literature of wisdom"40 என்று அமெரிக்கப் பேராசிரியரும் திறனாய்வாளருமான மைல்ஸ் அவர்கள் எமர்சனைப் பற்றிக் குறிப்பிட்டது நம் துணைவேந்தர் பெருந் தகைக்குப் பெரிதும் பொருந்துவதாகும். அவருடைய சிந்தனைகள் நல்ல அறவுரைகளாக அமைந்து சமுதாயத்தை அறிவுப் பாதையில் அறப் பாதையில் செலுத்துவனவாகும். எடுத்துக் காட்டுகள் சில :- - "கட்டை வண்டியைக் கூச்சலின்றியும் ஒழுங்காகவும் ஓட்ட உதவும் கீல்போல் - ஈருருளிக்கு இடும் எண்ணெய் போல், இயந்திரங்களுக்கு ஊற்றும் வழவழப்பான தனி எண்ணெய் போல் இன்சொல், மக்கள் வாழ்க்கை வழவழப்பிற்குத் தேவை 41 "அம்மா" என்ற சொல் எவ்வளவு பழமையானது? பிறந்த ஒவ்வொரு குழந்தையும் கற்றுக்கொள்ளும் புதிய சொல் அதுவே யாகும். அதேபோல் ஒவ்வொரு இந்தியரும் முயற்சியின் விளைவுகளை நம்பி வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் 48 "குட்டை, குளம் சிறு நிலத்தில் முடங்கி விடும். தேக்கமே நெடுந் தூரம் பரவும். எனவே மனிதன் குட்டை போன்று இருக்காது 'அறிவு சீனத்தில் இருந்தாலும், அதைத் தேடிக்கொண்டு வா" என்று நபிகள் நாயகம் கட்டளையிட்டதுபோன்று ஒவ்வொரு மனிதனும் அறிவைப் பெருக்கி அறிவைத் தேக்கமாக மாற்றவேண்டும்.48 "அறிவுத் தேரின் ஒரு பக்கத்துச் சக்கரம் கல்விக்கூடமாகவும், மறுபக்கத்துச் சக்கரம் நூல் நிலையமாகவும் கொண்டு மாந்தரெல்லாம் அறிவுத் தேர் ஏறி, ஒழுக்கப் பொறியுந்த அன்பெனும் நெடுஞ்சாலை சென்று வாழ்வோமாக.' 3344 2 6 !!