உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும் - "ஈ கண்டதைக் கொள்ளும் தன்மை கொண்டது. எறும்பு சுறு சுறுப்பும் முன் யோசனையும் தன்னிறைவும் பொறுமையும் ஒழுங்கும் கூட்டுணர்ச்சியும் கொண்டது. தேனீ, ஈயைப்போன்று அழுக்கை அண்டாது; எறும்பைப் போன்று கம்பை வரகை நாடாது. உயரிய பொருளான தேனை நேர்வழிச்சென்று சேர்க்கின்றது. அது எவ்வளவு தூரம் சென்றும் தேனை எடுப்பது போல நாமும் அறிவுத் தேன் எங்கிருந்தாலும் தேடிப் பெற வேண்டும். இந்த அறிவோ தேனைப் போன்ற மருந்தாகும்."45 இவ்வாறு துணைவேந்தர் பெருந்தகையவர்கள் இச் சமுதாயம் பயனுற வாழ்வதற்குத் தக்க நல்ல அறவுரைகளை முடிந்த விடங்களில் எல்லாம் அழகுற எடுத்தோதும் பெருஞ் சிறப்புக்குரியவர்களாக ஒளிர்கிறார்கள். முடிவுரை: ஈடு இணையில்லா நம் துணைவேந்தர் பெருந்தகையின் இலக்கியப் பணிகளின் வெற்றிக்குப் பின்புலமாக அமைந்திருப்பது அவருடைய எளிய தமிழ் நடையே யாகும்."பொங்கிப் புடைபுடைத்துக் கங்குகரை மீறிவரும் கடுவிசைக் காட்டாற்று வெள்ளமல்ல அவருடைய நடை; அவருடைய நடை இதமான தென்றல், இழுமென் மொழி; தெள்ளிய நீரோடை என்று கூறும் உலகப் புதுமைக் கவிகளின் தலைமைக் கவி யாகக் கருதப்படுகின்ற வால்ட் விட்மனின் கூற்று நம் துணைவேந்தர் பெருந்தகையின் இலக்கிய வெற்றிக்குரிய காரணத்தைத் தெளிவாக்கு வதாகவே உள்ளது. அவருடைய இரகசியம் நல்ல சிந்தனை வளம். வெற்றிக்கு இன்னொரு பெரிய உரத்த சிந்தனை வளமும் எளிய நடை நலமும் கொண்டு துணை வேந்தரின் படைப்புக்கள் விளங்குகின்றன. நம் துணைவேந்தர் பெருந் தகையின் சிந்தனைகள் தமிழினத்தின் ஒற்றுமையாலும் உழைப்பாலும் செயல் வடிவம் பெறுமேயானால் தமிழகம் உலக அரங்கில் அறிவுத் துறையில் ஒரு குறிஞ்சியாகத் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனத் துணியலாம். அடிக்குறிப்புகள் 1. "Poetry, the Queen of Arts'-Thomas Sprat. Poets are born and not made." 2. . 3. கற்பனை இசை — தமிழ் உறவு 15/11, 12/1972. 4. யாரே மதிப்பார்" 5. "யாரே மதிப்பார்?" - Showbit உரைக் கவிதை - 15-4-73. உரைக் கவிதை - 15-4-73