பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

'இந்தி' பொது மொழியா?


தெரியாதவர்கள்; தமது தாய்மொழியாயிற்றே என நினைந்து அதன் பொருட்டாகவாவது அதனைக் கற்கும் விருப்பமேனும் அவர்க்கு உளதோவென்றால் அது தானுந் தினையளவும் இல்லை. கோடிக்கணக்கான இத் தமிழ் மக்களுள் ஆயிரவரில் ஒருவர்க்குக்கூடத் தமது பெயரை எழுதிக் கையெழுத்துச் செய்யத் தெரியா தென்றாற், கல்வியறிவில்லா இவ்வேழை மக்களின் இரங்கத்தக்க இன்னா நிலையைப்பற்றி வேறு சொல்ல வேண்டுவது யாது உளது? ஆங்கில அரசு இந்நாட்டுக்கு வந்தபின் ஆங்கில மொழி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் இத்தென்னாடு வடநாடு எங்கணும் ஆயிரக்கணக்காகத் திறப்பிக்கப்பட்டு, ஆங்கிலமும் அதனுடன் சேர்த்துத் தமிழ் முதலான அவ்வத்தேய மொழிகளும் நம் இந்து மக்கட்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும், பொருள் வருவாய்க்குந் தற்பெருமை வாழ்க்கைக்குங் கருவியாய் இருத்தல்பற்றி, ஆங்கில மொழியைப் பெருந் தொகையினரான நம்மக்கள் பெரும் பொருட் செலவு செய்து விரும்பிக் கற்பதுபோல, ஆங்கிலத்துடன் சேர்ந்து ஒரு நாளில் ஒருசிறிது நேரமே கற்பிக்கப்படுந் தமிழ் முதலான நாட்டுமொழிகளை விரும்பிக்கற்பார் ஒரு சிலரையேனும் எங்குங் காண்கிலேம். அதனால், ஆங்கி லப்பள்ளிக்கூடங்கள் கல்லூரிகளிற் கற்றுத் தேறிவரும் மாணாக்கர்கள் தமிழ் முதலான நாட்டுமொழிகளிற் பிழை யின்றி எழுதவும் பேசவும் வன்மையில்லா தவர்களாகவும், நாட்டு மொழிகளில் உள்ள நூல்களிற் சிறந்த பயிற்சி யில்லா தவர்களாகவும் அதனால், தாம் ஆங்கிலத்திற் கற்றறிந்த அரிய நூற்பொருள்களை ஆங்கிலந் தெரியாத தம் இனத்தார்க்குந் தம் நாட்டார்க்கும் எடுத்துச்சொல்ல மாட்டா தவர்களாகவுந் தம் வயிறு கழுவும் வெற்றுயிர் வாழ்க்கையிலேயே வாணாட் கழித்து வருகின்றனர். ஆகவே, ஆங்கிலக் கல்விக்கழகங்களிற் கல்வி பயின்று வெளிவரும் நம் இந்திய மக்களிற் பெரும்பாலார் பொருள்