பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தி' பொது மொழியா?

11


வருவாய்க்கு வேண்டுமளவு சிறிது ஆங்கிலம் பயின்ற வராயும், அதனொடு சேர்த்துச் சிறிதே கற்பிக்கப்பட்ட தமிழ் முதலான மொழிகளைத் தப்புந் தவறுமாய்ப் பேச எழுதத் தெரிந்தவராயும் வெறும் போலி வாழ்க்கை யிற் சில்லாண்டுகளே உயிர் வாழ்ந் தொழிதலால், இந்நாட்டின்கட் பெருந்தொகையினராய் வெற்றுயிர் வாழ்க்கை செலுத்துங் கல்லா மாந்தர்க்குந், தமிழ் முதலான நாட்டுமொழிகளை வருந்திக்கற்றும் வறியராய்க் கார்த்திகைப்பிறைபோல் ஆங்காங்கு சிதறிச் சிற் சிலராய்க் காலங்கழிக்குந் தாய்மொழி கற்ற மாந்தர்க்கும் ஆங்கிலங் கற்றவரால் மிகுதியான பயன் ஏதும் விளைகின்றிலது. இங்ஙனமாகத், தமிழ் முதலிய தாய் மொழிப் பயிற்சிக்கென்று தனிப் பள்ளிகூடங்களுந் தனிக் கல்லூரிகளும் இல்லாமையால், பொருள் வருவாய் ஒன்றனையே கருதி நாடெங்குமுள்ள ஆங்கிலக் கல்விக் கழகங்களில் ஆங்கிலத்தையே விரும்பிக் கற்று, அத னுடன் சேர்த்துப் பயின்ற தாய்மொழிப் பயிற்சியில் விருப்பமுந் தேர்ச்சியுமில்லாமல், அவையில்லாமையால் தம் நாட்டவரைக் கல்வியறிவில் மேலேற்றும் எண்ணமுஞ் சிறிதுமே யில்லா தார் தொகையே பெருகிவரும் இந் நாளில், இத்தமிழ் நாட்டிலும், பிறமொழி பேசும் பிற நாடுகளிலும் அயல்மொழியான இந்திமொழிப் பயிற் சியை நுழைத்தால் அதனாற் பயன் விளையுமோ என்பதனை அறிஞர்கள் ஆழ்ந்தாராய்ந்து பார்த்தல் வேண்டும். ஆங்கிலம்போல் இந்தியும் அயல்மொழியே இப்போது, அயல்மொழியான ஆங்கிலத்தைக் கற்றார் தொகை இந்நாட்டில் மிகுதியாயிருந்தும், அவரால் இந்நாட்டுக் கல்லா மாந்தர்க்குந் தாய்மொழி கற்றார் சிலர்க்கும் ஏதொரு பெரும்பயனும் விளையா திருக்க, ஆங்கிலத்தை யொப்பவே அயல் மொழியான இந்தியை மட்டும் இனி நம்மவரிற் சிலர் கற்று வந்தாற் பெருங்கூட்டத்தினரான நம் ஏழை மக்கட்கு அவரால்