பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தி' பொது மொழியா?

13


இந்தி பொதுமொழி யன்று இந்திமொழியானது வட நாட்டவரெல்லாராலும் பொதுமொழியாக வைத்துப் பேசப்படுகின்றதென்பது உண்மையாகாது. ஏனென்றால், அது வடக்கே பற்பல நாடுகளிற் பற்பல மாறுதல்களோடு பேசப்படுகின்றதே யல்லாமல், அஃதெங்கும் ஒரேவகையாகப் பேசப்பட வில்லை. அங்கே ஒரு நாட்டவர் பேசும் இந்தியை, அதற் கடுத்த நாட்டிலுள்ளார் தெரிந்து கொள்ள மாட்டா தவரா யிருக்கின்றனர். இங்ஙனம் பலவகை மாறுதல்களுடன் பேசப்படும் இந்தி மொழியை ஆராய்ச்சி செய்த ஆசிரியர்கள் அதனை 'மேல் நாட்டு இந்தி', 'கீழ் நாட்டு இந்தி', 'பிகாரி' என்னும் மூன்று பெரும் பிரிவுகளா கவும் அப்பெரும் பிரிவுகளினுள்ளே இன்னும் பல சிறு பிரிவுகளாகவும் பகுத்திருக்கின்றனர். கங்கை யாற்றுக்கு மேற்கே பஞ்சாப்பின் தென்கிழக்கில் மேட்டுப் பாங்கான ஊர்களிற் பேசப்படுவது 'பாங்காரு' எனவும், வடமதுரையிலும் அதனைச் சூழ்ந்த இடங் களிலும் பேசப்படுவது, பிரஜ்பாஷா' எனவும், கங்கைக்கும் யமுனையாற்றுக்கும் இடையேயுள்ள நாடுகளின் தெற்கிற் பேசப்படுவது 'கனோஜ்' எனவும், பந்தல்கண்டிலம் நருமதையாற்றை யடுத்த இடங்களிலும் பேசப்படுவது 'பந்தேலி' எனவுந், தில்லி நகரத்திலும் அதனைச் சூழ்ந்த ஊர்களிலும் பேசப்படுவது 'உருது' எனவும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு இந்தியாவின் வடமேற் பகுதிகளிற் பேசப்படும் இவ்வைந்து மொழிகளும் மேல் நாட்டு இந்தி என்னும் பெரும் பிரிவில் அடங்குவன வாகும். இனிக், கீழ்நாட்டு இந்தி' என்னும் பெரும் பிரிவில் அடங்குவன : 'அவதி', 'பகேலி,' 'சத்தீஸ்கரி' என்னும் மொழிகளாகும். இம்மூன்று மொழிகளுள்ளும் 'அவதி' என்பதே முதன்மையுடையதாய் அயோத்தி, நாட்டின் கண் வழங்குகின்றது. இ.-3