பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

'இந்தி' பொது மொழியா?


இனிப், 'பிகாரி' என்னும் பெரும் பிரிவில் அடங் குவன : 'மைதிலி,' 'போஜ்புரி,' 'மககி' என்னும் மொழிகளாகும். இம்மூன்றனுள் முதன்மை வாய்ந்தது, கங்கை யாற்றின் வடக்கே மிதிலை நாட்டில் வழங்கும் 'மைதிலி' என்னும் மொழியே யாகும். இப்போது இந்திமொழி நூல்களென வழங்கப்படுவன வெல்லாம் இந்த மைதிலி மொழியிலே தான் எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் இந்திமொழியின் பிரிவுகளாக ஆங்காங்கு வட நாட்டின்கட் பேசப்படுஞ் சிறு சிறு மொழிகள் மேலும் பற்பல உள. இவ்வாறு இந்திமொழியின் பல பிரிவுகளாக வழங்கும் பற்பல மொழிகளைப் பேசும் பற்பல நாடுகளில் உள்ளாரும், ஒரு நாட்டவர் மொழியை மற்ற நாட்டவர் அறியாராய் உயிர் வாழ்ந்து வருதலின், இந்தி அவரெல்லார்க்குந் தெரிந்த பொதுமொழி என்றுரைப்பாருரை எங்ஙனம் பொருந்தும்? எங்ஙனம் உண்மையாகும்? இங்ஙனம் பற்பல நாடுகளிற் பற்பல மாறுதல்களுடன் வழங்கும் பலவேறு இந்தி மொழிகளில் எதனை இத் தென்னாட்டவர் கற்றுத் தேர்வது? எதனை இவர் கற்றாலும் அதனு தவி கொண்டு இவர் வட நாட்டவ ரெல்லாரோடும் பேசுதல் இயலுமா? இயலாதே. மேற்குறித்த இந்திமொழிகளே யன்றிச், 'சிந்தி', 'லந்தி', பஞ்சாபி', 'குஜராத்தி', 'ராஜபு தானி', 'குமோனி', 'கடுவாலி', 'நேபாலி', 'உரியா', 'பங்காளி', 'மராட்டி', 'சிணா,' 'காஸ்மீரி,' 'கோகிஸ்தானி,' 'சித்ராலி, ' 'திராகி', 'பஷை', 'கலாஷா,' 'கவர் படி' முதலான இன்னும் எத்தனையோ பலமொழிகளும் வடக்கே பற்பல நாட்டின் கணுள்ள பற்பல மாந்தர்களாலும் பேசப்பட்டு வரு கின்றன. இம்மக்கட் பெருங் கூட்டத்துடனெல்லாம், இந்திமொழியில் ஒன்றை மட்டும் தெரிந்த தென்னாட் டவர் உரையாடி அளவளாவுதல் கூடுமோ? சிறிதுங் கூடாதே. வட நாட்டவரிலேயே இந்திமொழியை அறி யாமற் பலதிறப்பட்ட பன்மொழிகளை வழங்கும் மக்கட் கூட்டம் பலவாயிருக்க, இத் தென்னாட்டவர் மட்டும் இந்திமொழியைக் கற்றுப் பேசு தலால் யாது பயன்