பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

'இந்தி' பொது மொழியா?


புராணம், சிவஞானபோதம் முதலான அரும் பெருந் தமிழ் இலக்கண இலக்கிய வீட்டு நூல்களும், அவை தமக்குச் சொற்பொருள் நுட்பமுஞ் சுவையும் மலிந்த சிற்றுரை பேருரைகளும் இயற்றித், தமிழை மாறா நாகரிக இளமை வளத்தில் இன்றுகாறும் இனிது வழங்கச் செய்துவரு. தலால், அதனை வழங்குந் தமிழ் மக்களெல்லாரும் ஒருவர் ஒருவர்க்கு நெடுந் தொலைவில் இருப்பினும் அதனாற் பேசியும் எழுதியும் அளவளாவி ஓரிடத்திலுள்ள ஒரே மக்களினம்போல் உயிர் வாழ்ந்து வருகின்றனர். இந்திமொழி வரலாறு மற்று, இந்தி, உருது முதலான வட நாட்டு மொழிகளோ தமிழைப்போற் பழைமையானவைகள் அல்ல; மகமதிய மதத்தவரான மொகலாய அரசர்கள் வட நாட்டின் மேற் படையெடுத்துப் போந்து, 'தில்லிப் பட்டினத்தைத் தலை நகராய்க் கைக்கொண்டு, அதன் கண், அரசு வீற்றிருக்கத் துவங்கிய பின்னரே அம் மொழிகள் தோன்றியனவாகும். 'மகமது கோரி' என்னுந் துலுக்க மன்னன் வட நாட்டின் மேற் படையெடுத்துப் போந்து இந்திய அரசர்களை வென்று அதனைக் கைக்கொண்டது கி. பி. 1175 ஆம் ஆண்டின் கண்ண தாகும்; அஃதாவது இற்றைக்கு 762 ஆண்டுகட்கு முன்ன தாகும். அதுமுதல் துலுக்கமன்னரது ஆட்சியானது நாளுக்கு நாள் வேரூன்றி வரலாயிற்று. கடைசியாக 'மகமது பின் துகலாக்கு' என்னும் மன்னனால் கி.பி. 1340 ஆம் ஆண்டில் துலுக்க அரசு தில்லி நகரில் நிலைபெற்றது. அக்காலத்தில் தில்லி நகரிலும், அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பிராகிருதச் சிதைவான ஒருமொழி வழங்கிக் கொண்டிருந்தது. அப்போது அது வெறும் பேச்சு வழக்கில் மட்டும் இருந்த தல்லாமல், நூல் வழக்கிற் சிறிதும் இல்லை. ஏனென்றால், அது நாகரிகமில்லா மக்களாற் பேசப்பட்டுப் பலப்பல மாறுதல்கள் அடைந்த வண்ணமாய் நடைபெற்று வந்த தனாலும், அறிவுடையோர் தோன்றி அம்மொழியைச்