பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தி' பொது மொழியா?

17


சீர்திருத்தி இலக்கண இலக்கிய நூல்களியற்றி எழுத்து வடிவில் அதனை நிலைப்படுத்தி வையாததனாலும் அதற்கு அந்நாளில் நூல்வழக்கு இலதாயிற்று. தில்லியில் துலுக்கரரசு நிலைபெற்றபின், அவர் கொணர்ந்த அராபி மொழி பாரசிகமொழிச் சொற்கள் அம்மொழியின்கண் ஏராளமாய்க் கலக்கப் பெற்று, அவரால் அஃது 'உருது' எனவும் பெயர்பெறலாயிற்று. 'உருது' என்னுஞ் சொல் லுக்குப் பொருள் பாசறை, பாடி அல்லது படைவீடு என்பதேயாகும். எனவே, துலுக்கமன்னர் தாங் கைக் கொண்ட நகரையடுத்து முன்னமே பேசப்பட்டுவந்த பிராகிருதச் சிதைவான ஒரு மொழியில், தாங் கொணர்ந்த அராபிச் சொற்கள் பாரசீகச் சொற்களையும் மிகக்கலந்து தமது பாசறையிருப்பின்கட் பேசிய கலவைமொழியே அவரது காலந்தொட்டு 'உருது' மொழியெனப் பெயர் பெற்று நடைபெறலாயிற்று. இதனால் 'உருது' என்பது துலுக்கமன்னரது படைவீட்டு மொழியாய் முதன் முதற் றோன்றி நடைபெற்ற வரலாறு நன்கு விளங்கா நிற்கும். அதன்பின், நூல்வழக்குடைய தாய் இஞ்ஞான்றும் வழங்கும் இந்திமொழியானது 'லல்லுஜிலால்' என்ப வரால் உருது மொழியினின்றும் பிரித்துச் சீர்திருத்தஞ் செய்யப்பட்ட தொன்றாகும். இதற்குமுன் உள்ள தான பிராகிருதஞ் சிதைவு மொழியிற் கலந்த பாரசிக அராபிச் சொற்களை அறவே யொழித்துச், சமஸ்கிருத மொழிச் சொற்களை மிகுதியாய் எடுத்துச் சேர்த்து அவர் இந்தி மொழியைப் புதிதாய் உண்டாக்கினார். இங்ஙனம் அவரால் ஆக்கப்பட்ட இந்திமொழிக்கும், இதற்கு முன்னே தொட்டு நாகரிகமில்லா வடநாட்டு மக்களால் ஆங்காங்குப் பேசப்படும் பிராகிருதச் சிதைவான இந்தி மொழிக்கும் வேறுபாடு மிகுதியாய் இருக்கின்றது; அதற்குக் காரணம் என்னென்றால், முன்னையது வடசொற் கலப்பு நிரம்ப உடைய தாயிருத்தலும், பின்னையது அஃதின்றிப் பிராகிருத மொழிகளின் சிதைவாயிருத் தலுமேயா மென்பதனை நன்கு நினைவிற் பதித்தல் இதை பேச போகனன் ஒருத்தன் கற்ப