பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

'இந்தி' பொது மொழியா?


இனி, இற்றைக்கு 480 ஆண்டுகளுக்கு முன், தர்பங்கா மாகாணத்தின் கண்ண தான 'பிசபி' என்னும் ஊரில் 'வித்யாபதி தாகூர்' என்னும் பெயர் பூண்ட வைணவர் ஒருவர் தோன்றிக், கிருஷ்ணமதத்தை உண் டாக்கி, அதனை வடகீழ் நாடுகளில் மிகவும் பரவச் செய்தனர். இந்தி மொழியின் மற்றொரு பிரிவான 'மைதிலி' மொழியில் இவர், கண்ண னுக்கும் அவன் காதலி இராதைக்கும் இடையே நிகழ்ந்த காதல் நிகழ்ச்சிகளை விரித்துப் பல பாடல்களைப் பாடியிருக் கின்றார். இப் பாடல்களையே பின்னர்ப் பங்காளி' மொழியிற் சைதன்யர்' என்பார் மொழி பெயர்த்து, அவற்றை வங்காள தேயமெங்கும் பரவ வைத்தனர். இது கொண்டு, இந்திமொழி வங்காள தேயத்திலுள்ளார்க்குள் வழங்காமை அறியப்படுகின்ற தன்றோ? வட நாட்டிற் பெரும்பரப்பின தான வங்காள தேயத்தார்க்கே தெரியா ததான இந்திமொழியைத் தென்னாட்டிலுள்ளவர்கள் பயின்றாலும், இவர்கள் வங்காள மக்களுடன் அதிற் பேசி உறவாட முடியாதன்றோ ? இன்னும் இங்ஙனமே கபீர் தாசர் காலம் முதல் அஃதாவது சென்ற 500 ஆண்டுகளாக வட நாட்டின்கட் டோன்றி, இராமகிருஷ்ண வணக்கங்களை இந்தியின் உட்பிரிவான சிலமொழிகளில் உயர்த்துப் பாடி அவற்றை வடநாடுகளிற் பரவச்செய்த இந்திமொழிப் புலவர்களின் வரலாறுகளை யெல்லாம் எடுத்துரைக்கப் புகுந்தால் இக் கட்டுரை மிக விரியும். ஆதலால், இதுவரையிற் கூறியது கொண்டு, இந்திமொழியானது 500 ஆண்டுகளுக்கு முன் நூல்வழக்கில்லாமற், கல்வியறிவில்லா வடநாட்டு மக்களால் அந்நாட்டின் பலபகுதிகளிலும் பலவாறு திரித்துப் பேசப்பட்டு, ஒருபாலார் பேசும் மொழி மற்றொரு பாலார்க்குத் தெரியாத வண்ணம் வழங்கினமையால், அஃது இஞ்ஞான்றுங்கூடப் பற்பல மொழிகளாகவே பிரிந்து வழங்குகின்ற தென்பதும், அதனால் இந்தியை வட நாட்டவர் எல்லார்க்கும் பொதுமொழியெனக் கூறு