பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

'இந்தி' பொது மொழியா?


கூறுவன. பிற்காலத்தில் வடசொற் கலப்பும் வடநூம் பொய்க் கொள்கைகளுங் கதைகளும் விரவிய மொழி பெயர்ப்பு நூல்கள் தமிழில் அளவின்றிப் பெருகித் தமிழ் மக்களை அறியாமையிலும் பொய்யிலும் பல தீவினைகளிலும் படுப்பித்திருந்தாலும், விழுமிய பண்டைத் தமிழ் நூற் பயிற்சியுஞ் சைவசித்தாந்த மெய்யுணர்வுந் திரும்பப் பரவத் துவங்கியபின், ஆரியப் பொய்ந்நூல் வலி தேய்ந்து வருகின்றது. அதனுடன் மேல் நாட்டு வெள்ளைக்கார மெய்யறிவினரின் அரிய பெரிய ஆராய்ச்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியின் வாயிலாக இவ்விந்திய நாடெங்கும் பரவி வருவதும் ஆரிய நூற் பொய்ம்மை விரைந்து தேய் தற்குப் பெரிதுந் துணை செய்து வருகின்றது. இவைகளை யெல்லாம் நடு நின்று நோக்கவல்ல உண்மைத் தேயத் தொண்டர்கள் உளராயின், இவ்விந்திய நாட்டுக்கு மிகப் பழைய மொழியாய் இருப்பதுடன், இன்றுகாறும் பல கோடி மக்களாற் பேசப்பட்டு வரும் உயிருடை மொழி யாயும், இவ்விந்திய மக்களை எல்லாத் துறைகளிலும் மேலேற்றத் தக்க பல சீரிய நூல்களை உடைய தாயும் உள்ள தமிழ் மொழியையே இவ்விந்திய தேயம் முழு மைக்கும் பொதுமொழி யாக்க அவர் முன் வந்து முயலல் வேண்டும். மேலுந், தமிழ்மொழி வழங்குந் தமிழ் மக்கள் இத் தென்னாட்டின் மட்டுமேயன்றி நடு நாட்டின்கட் பங்களூர், மைசூர், சிகந்தராபாக்கம் முதலியவற்றிலும், மேற்கே புனா, பம்பாய் முதலிய இடங்களிலும், வடக்கே கல்கத்தா, காசி முதலான நகர்களிலுங், கிழக்கே காக்கிநாடா, நெல்லூர் முதலான ஊர்களிலும் பெருந்தொகையின ராய்க் குடியேறியிருந்து வாணிக வாழ்க்கையிற் சிறந்து வாழ்கின்றனர். தமிழ் மக்கள் இவ்விந்திய தேயத்தின் மட்டுமே யன்றி, இதற்கு அப்பாலுள்ள எல்லாத் தேயங் களிலும் போய் வைகி வாழ்ந்து வருவதும் முன்னமே காட்டினாம். இங்ஙனம் எல்லா வகையாலுஞ் சிறந்த தமிழ்மொழி இவ்விந்திய நாடு முழுமைக்கும் பொதுமொழி