பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தி' பொது மொழியா?

25


யா தற்குரிய நலங்கள் எல்லாம் வாய்ந்ததாயிருந்தும், அதனைப் பொதுமொழியாக்க முயலாமல், நானூறு ஐந்நூறு ஆண்டுகளாகவே தோன்றிப் பழைய சிறந்த நூற்செல்வ மின்றி வறியனவாய்ப் பலவகைக் குறை பாடுகள் உடையனவாய்ப் பெரும்பாலும் நாகரிகமில்லா வடவர்களாற் பேசப்படும் 'இந்தி' முதலான சிதைவுக் கலப்பு மொழிகளை இத் தேயத்திற்குப் பொதுமொழி யாக்க வேண்டுமென்று கூக்குரலிட்டு முயல்வோர் உண்மையான தொண்டர்களாவரா வென்பதனை அறி வுடையோர் ஆழ்ந்து நினைத்துப் பார்த்தல் வேண்டும். தமிழ் அல்லாத மொழிகள் வறியன புதியன இனித், தமிழ் அல்லாத மற்றை மொழிகள், தமிழுக்கு மிகப் பிற்பட்ட காலத்தே தோன்றித், தமக்கென இலக்கண இலக்கிய நூல்கள் இல்லாமற், பாரசிகம் அராபி சமஸ்கிருதம் முதலான பழைய மொழிகளிலுள்ள புராணங்கள் காவியங்கள் அவற்றின் கதைகளையே மொழி பெயர்த்துரைப்பனவுந் தழுவி யுரைப்பனவுமா தலைச் சிறிது விளக்குவாம். இந்தியின் உட் பிரிவான சில மொழிகளிற்றோன்றிய நூல்கள் இற்றைக்கு 500 ஆண்டு களுக்குள் இயற்றப்பட்டனவா தலை மேலே விளக்கிக் காட்டினாம் ; அந் நூல்களிற் சிறந்தனவாக வடவராற் கொள்ளப்படுவன கபீர் தாசர் இராமன்மேற் பாடிய பாடல்களும், இற்றைக்கு 314 ஆண்டுகளுக்கு முன் னிருந்த 'துளசிதாசர்' இயற்றிய 'இராமசரி தமானசம்' என்பது மாகும். இனி, 'உருது' மொழி யென்பது சமஸ்கிருதக் கலப் பின்றி, மேற்கேயுள்ள பாரசிக அராபி மொழிச் சொற்கள் சொற்றொடர்கள் மிகு தியுங் கலக்கப் பெற்றதாய், அம் மொழிப் புலவர்களின் போக்கைப் பின்பற்றி நடைபெறுவ தாகும். இற்றைக்கு 157 ஆண்டுகளுக்கு முன் 'ஒளரங்க பாத்தி' லிருந்த 'சௌதா' என்னும் புலவரே முதன்