பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தி' பொது மொழியா?

27


தோபா ,' 'ஏக நாத்', 'ராம் தாஸ்', 'மகீபதி' முதலிய புலவர்கள் வடமொழியிலுள்ள 'பகவத்கீதை', 'விஷ்ணு புராணக்கதை'. 'இராமன் கதை', 'சமயக் கிரியை', பக்த விஜயம்' முதலானவைகளைத் தழுவி நூல்களும் பாட்டுகளும் மராட்டி மொழியில் இயற்றினார்கள் என்றாலும், மராட்டி வேந்தனான 'சிவாஜி' காலமுதற் கொண்டு தான், அஃதாவது சென்ற 300 ஆண்டுகளாகத் தாம் மராட்டி மொழி நூல் வழக்குடைய தாகி நடைபெறு கின்ற தென்பது உணரற்பாற்று. குஜராத்தி மொழியில் முதன் முதற் சில பாடல்களைப் பாடினவர் இற்றைக்கு 450 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நரசிங்கமேதா' என்பவரேயாவர். ஆனாலுங், கி. பி. 1681 ஆம் ஆண்டில் அஃதாவது இற்றைக்கு 256 ஆண்டு களுக்கு முன்னிருந்த ப்ரேமானந்தபட்' என்பவரும், ரேவாசங்கர்' என்பவரும் 'நரசிங்க மேகே தாநு', என்னும் நூலையும் மகாபாரதத்தையும் இயற்றிய பின்னர் தான் குஜராத்தி மொழி நூல் வழக்குடைய தாயிற்று. இனி, இவ்விந்திய நாட்டின் தெற்கே வழங்கும் மொழிகள் அத்தனையுந் தமிழோடு இனமுடையவை களாகும். அதனால், அவை 'திராவிட மொழிகள் ' என்று வழங்கப்படுகின்றன. அம் மொழிகள் எல்லாவற்றுள்ளும் நந்தமிழ் ஒன்றே சிறிதேறக்குறைய பத்தாயிர ஆண்டு களாகச் சீர்திருத்தமுற்று, நுண்ணறிவு மிக்க சான்றோர் களால் இயற்றப்பட்ட இயல் இசை நாடக இலக்கணங் களும் ஆயிரக்கணக்கான பலவேறு இலக்கியங்களும் உடைய தாய், நூல் வழக்கும் உலக வழக்கும் வாய்ந்து நடைபெறுவதென்பதை முன்னரே விளக்கிக் காட்டினாம். இனி, ஏனைத் திராவிட மொழிகளுள் தமிழோடொத்த பழைமையுஞ் சிறப்புத் தனித்தியங்கும் ஆற்றலும் பழைய தனி இலக்கண இலக்கிய நூல்வளனும் உடையது ஏதுமேயில்லை. என்றாலுந், தமிழல்லாத மற்றைத்