பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

'இந்தி' பொது மொழியா?


அவர் வழங்கிய தமிழும் நூல் வழக்கில்ல தாய்ச் சொற் றிரிபு மிகவுடைய தாகி, அதனாற் பிறிதொரு மொழிபோல் தெலுங்கு' எனப் பிற்காலத்தே பிறிதொரு பெயர் பெற்று நடைபெறலாயிற்று. இற்றைக்கு 800-ஆண்டு களுக்கு முன், அஃதாவது கி. பி. பதினொராவது நூற் றாண்டுக்கு முன் இயற்றப்பெற்ற ஒரு தெலுங்கு நூலா வது, ஆந்திர அரசர்களாற் பொறிப்பிக்கப்பட்ட ஒரு கல் வெட்டாவது, எவ்வளவோ நம் ஆங்கில அரசினர் தேடிப் பார்த்தும், இதுகாறும் அகப்படவில்லை. அதனால், 800-ஆண்டுகளுக்கு முன், தெலுங்கு மொழி சீர்திருத்தம் எய்தி நடைபெறவில்லை என்பது திண்ணமாய்ப் பெறப் படுகின்றது. கி.பி. 11ஆம் நூற்றாண்டிற் றோன்றிய நன்ன யபட்டர் என்பார், கி.பி. 1022-முதல் 1063 வரையில் அரசுபுரிந்த சாளுக்கிய மன்னனான ' ராஜராஜ நரேந்திரன் ' செய்த வேண்டுகோளுக்கிணங்கி, வட மொழியிலுள்ள 'மகாபாரதத்தை ஆரணிய பருவம் வரையிலுந் தெலுங்கில் மொழிபெயர்த்தியற்றிய காலந் தொட்டே தெலுங்கு மொழி நூல் வழக்குடைய தாயிற்று. நன்னயர் இயற்றிய மாபாரத தெலுங்கு மொழி பெயர்ப் பில் வடசொற்கள் இரண்டு பங்குந் தெலுங்குச் சொற்கள் ஒரு பங்குமே காணப்படு தலால், தெலுங்குமொழி அந் நாளிலேயே வடமொழியின் உதவியின்றித் தனித் தியங்கும் ஆற்றல் இல்லாததொன்றாய் நடைபெற்றமை தெற்றென விளங்கா நிற்கும். இனித், தமிழ் நாட்டை யடுத்துள்ள மேல் நாடுகளில் இப்போது வழங்கும் மலையாள மொழி, இற்றைக்கு முந்நூறாண்டுகளுக்கு முன் முழுதுந் தமிழாகவே யிருந்தது. ஆனால், அத்தமிழ், இத்தமிழ் நாட்டில் வழங்குஞ் செந்தமிழ் மொழியின் சொற்கள் திரிந்த கொச்சைத் தமிழா கும். என்றாலும், அத்திரிபுகளை நீக்கிப் பார்த்தால் மலையாளம் முற்றுந் தமிழ் மொழி யாகவே காணப்படுகின்றது. மலையாள மொழியில் முதன் முதல் 'இராமாயணத்தை மொழி பெயர்த்துப் பாடியவர்