பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தி' பொது மொழியா?

37


அரசியற்பணி புரிவாராயுள்ளவர்களும், அவரது நாட்டிற் பெருஞ் செல்வர்களாய் உள்ளவர்களும், வாணிக வாழ்க்கையில் வாழ்பவர்களும் எல்லாந் தமதாங்கில மொழியைப் பயின்று தேர்ச்சி பெற்றவர்களாவர். இங்ஙனம் முடிவேந்தர் முதல் வணிகர் ஈறான பெருஞ் செல்வர்களனைவருந் தந் தாய்மொழியாகிய ஆங்கிலத்தை நன்கு பயின்றவர்களாய் இருத்தலாற், கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை' என்னும் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் தம் அருண் மொழிப்படி மக்கட்கு அழியாச் செல்வமாவது கல்வியே யென்று அவர்கள் கடைப்பிடியாய் உணர்ந்து, தங்கள் செல்வத்தையெல்லாங் கல்வி விளக்கத்திற்கென்றே செலவழித்து வருகின்றார்கள். பாருங்கள்! நந்தமிழ் நாட்டில் தமிழ் கற்பித்தற்கென்று இரண்டு மூன்று உயர்ந்த பள்ளிக்கூடங்களைக் காண்பது தானும் அரிதா யிருக்க ஆங்கிலங் கற்பித்தற்கோ எத்தனை ஆயிரக் கணக்கான பள்ளிக்கூடங்களும், உயர்ந்த கல்லூரிகளும், இவை தம்மை அகத்தடக்கிய பல்கலைக் கழகங்களும் இருக்கின்றன! இவைகட்கெல்லாம் எத்தனை கோடிக் கணக்கான பொருள் ஆங்கில அரசினராலுங் கிறித்து சமயக் குருமார்களாலும் அளவின்றிச் செலவு செய்யப் பட்டு வருகின்றன ! இவ்வாறு இத்தமிழ் நாட்டிலும், இவ்விந்தியதேயத் தின் பிற நாடுகளிலும் ஆங்கில மொழிப்பயிற்சிக்கென்று ஆங்கிலராற் சென்ற ஒரு நூற்றாண்டாகச் செலவு செய்யப்பட்டு வருந்தொகையைக் கணக்கெடுக்கப் புகுந் தால் அது கணக்கில் அடங்குவதாயில்லை. இங்ஙன மெல்லாம் ஆங்கிலர் தமது மொழிப்பயிற்சியினை இவ் விந்திய தேயமெங்கும் பரவவைத்து வருதலைப் பார்த்தா யினும், இங்குள்ள செல்வர்களுக்குத் தமிழ்ப்பயிற்சியைப் பரவவைக்க வேண்டுமென்னும் உணர்ச்சியும் முயற்சியும்