பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை


'இந்தி பொது மொழியா?' என்னும் இவ் ஆராய்ச்சிக் கட்டுரை ஆசிரியர் மறைத்திரு மறைமலை யடிகளாரால் முப்பது ஆண்டுகட்கு முன் இயற்றப் பட்டதாகும். இந்தி முதன் முதல் தமிழகத்தில் கட்டாய பாடமாகப் புகுத்தப்பட்ட அந்நாளில் அதனை எதிர்த்துப் பெருங்கிளர்ச்சி எழுந்தமையும், இந்தியால் தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் எத்துணைக் கேடுகள் விளையும் என்பதை விளக்கிப் பேரறிஞர்களும், இதழ் களும் மறுப்புரைகள் வழங்கியமையினையும் நாடு நன்கறியும்.

அத்தகைய நிலையில் மறைமலையடிகளாரின் நுண் மாண் நுழைபுல மிக்க இவ்வாராய்ச்சிக் கட்டுரை பெரிய தோர் ஒளிவிளக்காய், இந்தி ஆதரவாளர்களும் மறுத் துரைக்க முடியாத ஆணித்தரமான கடா விடைகளான் நிறைந்த கட்டுரையாகத் திகழ்ந்தது - திகழ்கின்றது. அன்று தோன்றிய இந்தி எதிர்ப்பு இன்றுகாறும் அணையாத் தீயாகப் புகைந்தும் கனன்றுங் கொண் டிருக்கும் இந்நிலையில், தமிழகத்தார் உள்ளத்தைப் புண்படுத்தும் வகையிலும், அவர் தம் தன்மானத்துக்கு அறைகூவல் விடுக்கும் முறையிலும் இந்தியப் பேரரசு இந்தியைப் பல்லாற்றானும் நாடோறும் வலிந்து புகுத்திய வண்ணமிருக்கின்றது. இந்தியைப் பரப்பும் இம்முயற்சி எங்குபோய் நிற்கும் எனவும், அதன் விளைவுகள் என்னாகும் 'எனவும் எண்ணிப் பார்ப்பதற்கே அச்சமா யிருக்கின்றது.

எனவே, இந்நிலையில் தமிழ்காக்கும் பணியில் டுபட்டிருக்கும் நாம், தனித் தமிழ்த் தந்தை மறைமலை