பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை
[கருவூர் திரு. ஈழத்துச் சிவாநந்த அடிகள்]


இந்நூலின்கண் உள்ள ஒவ்வொரு சொல்லுந் தமிழ் மக்கட்குப் புதியதொரு உணர்ச்சி கிளர்ந்தெழு மாறு உணர்த்தி, இப்போது தமிழ் நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்திமொழிக் கிளர்ச்சியினால் தமிழுல குக்கு விளையும் இன்னல்கள் அனைத்தையும் நன்கு விளக்கிக் காட்டுவதில் ஞாயிறே போன்று திகழ்வதுடன், தமிழ்மக்கள் தங்கள் எதிர்கால நாகரிக வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கான நெறிகளைத் தெளிவுபெறத் தெரிக்கும் பெற்றியினவாயும் மிளிர்கின்றன. ஆகவே, இவ்வரிய ஆராய்ச்சி நூலைப் பொன்னேபோற் போற்றிப் பயின்றும், தமிழ்மொழிக்கும் தமிழ்க் கலைக்கும் தமிழர் நாகரிகத்திற்கும் ஊறு விளைக்க முன்வந்திருக்கும் வேண்டாக் கிளர்ச்சியாகிய இந்தி மொழி இயக்கத்தைப் பிறமொழிகளின் உதவியின்றி எல்லாவகை வாழ்க்கை நலங்கட்கும் வழிகாட்டுந் தனித்தமிழ் மொழி வழங்கும் நந்தமிழ் நாட்டில் தலையெடுக்க வொட்டாதோடச் செய்தும், நந்தாய்மொழியாம் தமிழுக்கு ஆக்கந்தேடி, அம்மொழியின் கண் உள்ள தனித்தமிழால் ஆக்கப்பெற்ற அறிவு நூல்களையே கற்றுணர்ந்து, அவ்வழியே ஒழுகி, நலம் பெறுவார்களாக.