பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

'இந்தி' பொது மொழியா?


மொழிகள் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பஃது என்று மொழியராய்ச்சிவல்ல அறிஞர்கள் கணக்கெடுத் திருக்கின்றார்கள். இங்ஙனம் ஒன்று குறையத் தோன்றிய ஆயிர மொழிகளிற், சிற்சிலவே பேசவும் எழுதவும் படுவன; அவற்றுள்ளும் ஒரு சிலவே இலக்கண இலக்கிய நூல்கள் உடையன; அவற்றுள்ளும் மிகச்சிலவே மிகப் பழைய மொழிகளாய் உள்ளன. இம்மூவகை நலங்களும் வாய்ந்த வை: தமிழ், எகுபதியம் , சாலடியம், ஈபுரு, சீனம், மெகுசிகம், ஆரியம், கிரேக்கம், இலத்தீன், ஆராபி முதலிய சிற்சில மொழிகளே யாகும். இவை பண்டிருந்த நாகரிக மக்களாற் பேசவும் எழுதவும் பட்டதுடன், சிறந்த பல இலக்கண இலக்கிய நூல்களும் வாய்ந்தனவாய், எக்காலத்துந் தம்மைப் பயில்வார்க்கு அறிவையும் இன் பத்தையும் மேன்மேற் பெருக்கும் பெரும் பயனும் வாய்ந்த விழுமிய மொழிகளாகும். என்றாலும், இம்மிகப் பழையா மொழிகளில் தமிழ் ஒன்றைத் தவிர, மற்றையவெல்லாம் இஞ்ஞான்றுள்ள எந்த மக்கட் குழுவினராலும் பேசப் படாமல் இறந்தே போய்விட்டன. ஆகவே, இறந்த அப்பண்டைமொழிகளைப் பயில்வது. அவற்றின்கட் பண்டை ஆசிரியர்கள் இயற்றிவைத்த அரிய நூல்களைக் கற்றுப் பல பழம்பொருள்களையும் பல நுண்பொருள்களை யும் அறிந்து அறிவு பெறுதற்கு தவிசெய்யுமே யல்லா மல், இஞ்ஞான்றுள்ள எந்த மக்கட் கூட்டத்துடனுங்க கலந்து பேசி உறவாடி வாழ்க்கை செலுத்து தற்கு அது சிறிதும் உதவி செய்யாது.

தமிழும் புதுமொழிகளும்

ஆனால், நமதருமைச் செந்தமிழ் மொழியோ மிகப் பழைய காலத்தேயிருந்து இன்றுகாறும் இனிவருங் காலத்தும் பலகோடி மக்களால் இந்தியா, இலங்கை, பர்மா, மலாய் நாடு, தென்னாப்பிரிக்கா முதலான பற்பல தாடுகளிலும் பேசவும் எழுதவும் பட்டு வழங்கிவருந் தனிப்பெரும் பண்டை உயிருடைமொழி ஒன்றேயாய்