இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழைப் பழம்
வாழைப் பழத்தில் பல உண்டு
வகைவகை யான பெயர் உண்டு.
பூவன், மொந்தன், ரஸ்தாளி,
பேயன், நேந்திரம், மலைவாழை
என்றே வகைகள் பல உண்டாம்.
எல்லாம் எனக்குப் பிடித்தவையே.
தினமும் மிகவும் நான்விரும்பித்
தின்பது வாழைப் பழமேதான் !
9