இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வா, மழையே வா
கத்திக் கப்பல் செய்து வைத்தேன்.
கால்வாய் கூடத் தோண்டி வைத்தேன்.
வா, மழையே, வா.
வா, மழையே, வா.
சின்னச் செடியை நட்டு வைத்தேன்.
செப்புக் குடத்தை எடுத்து வைத்தேன்.
வா, மழையே வா.
வா, மழையே வா.
விதிப் பக்கம் வந்து நின்றேன்.
மேலே மேலே பார்த்து நின்றேன்.
வா, மழையே, வா.
வா, மழையே, வா.
13