பக்கம்:இனிக்கும் பாடல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


வெள்ளைக்
கொக்கு




ஆட வில்லை; அசைய வில்லை.
அடடே, பளிங்குச் சிலைபோல்
ஆற்றின் ஓரம் நிற்கும் அந்த
அழகுக் கொக்கைப் பாராய் !

நீண்ட கால்கள், நீண்ட கழுத்து,
நிறமோ வெள்ளை யாகும்.
காண்ப தற்குச் சாது. ஆனால்
கவன மாக நோக்கும்.

ஈட்டி போன்ற அலகை முன்னல்
நீட்டிக் கொண்டு நிற்கும்.
இரையைக் கண்ட வுடனே அதுவும்
எட்டி விரைந்தே பிடிக்கும் .

மீன்கள், கண்டு, தவளை, பூச்சி
விரும்பிப் பிடித்துத் தின்னும்:
மெல்ல நாமும் நெருங்கிச் சென்றால்
விரைந்து மேலே பறக்கும் !