இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கோமதிக்கு வீடு உண்டு,
கோடம் பாக்கத்தில்.
குமரனுக்கு வீடு உண்டு
குரோம் பேட்டையில்.
மீனாவுக்கு வீடு உண்டு
மீனம் பாக்கத்தில்.
செளந்தருக்கு வீடு உண்டு
சைதாப் பேட்டையில்
இவர்கள் வீடு செல்லவே
ஏறு ஏறு ரயிலிலே,
புகைவி டாத ரயிலிலே
போக லாமே விரைவிலே !
26